சினிமா

தனுஷ் – சிம்பு இணைந்து எழுதி நடித்து உருவாக்கும் படம் ! யுவன் இசை – வெளியாகியுள்ள சூடான செய்தி !

Dhanush and Silambarasan

தமிழ் சினிமாவில் விஜய் – அஜித்துக்கு அடுத்தபடியாக இருப்பது சிம்பு – தனுஷ் க்லாஷ் தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை. தனுஷ் சிம்பு இருவருமே நடிப்பு, திரைக்கதை எழுதுவது, இயக்குவது, பாடுவது என பல்திறன் கொண்டவர்கள்.

தனுஷ் அயராது உழைத்து ஹாலிவுட் வரை சென்று நம்மை பெருமை படுத்தினார். அவரின் அசராத நடிப்புக்கு தேசிய விருதுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. மறுபக்கம் சிலம்பரசன் அளவிலடங்கா ரசிகர் பட்டாளம் கொண்டவர். சிறு குழந்தையாக இருந்த போதே தன் தந்தை படங்களில் தொடந்த்து நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

மன்மதன், வல்லவன் போன்ற படங்கள் மூலம் இளம் சமுதாயத்தை தன் பக்கம் ஈர்த்தார். நடுவில் சொந்த பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் மோசமான பெயர் பெற்று அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் உறுதியாக உடல் எடையைக் குறைத்து மாநாடு படம் மூலம் அபார கம்பேக் கொடுத்தார் ஆட்மேன் சிலம்பரசன்.

சமீபத்தில் தனுஷ் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் என இரு சிறப்பான படங்களை தந்துள்ளார். சிலம்பரசனும் வெந்து தணிந்தது காடு படத்தில் மிக பிரமாதமாக நடித்து பார்வையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்தார். இரு தரப்பு ரசிகர்களும் யார் சிறந்தவர்கள் என சமூக வலைதளங்களில் வாக்குவாதம் செய்யும் நிலையில் தற்போது அந்தக் கூட்டம் உற்சாகக் கடலில் மிதக்கும் அளவிற்கு ஓர் செய்தி வந்துள்ளது.

அது என்னவென்றால் நடிப்பு அரக்கர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து ஓர் படத்தை உருவாக்க உள்ளனர். படத்தின் கதை, திரைக்கதையை இருவரும் சேர்ந்து எழுதுவதாகவும் இயக்கத்தை தனுஷ் பார்த்துக் கொள்ளப் போவதாகவும் கூறுகின்றனர். தனுஷ் – சிம்புவுக்கு தன் சிறந்த இசையைக் கொடுத்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவே இந்த படத்திற்கும் இசையமைப்பாராம். இந்த ஸ்கிரிப்ட்டை முடிப்பதற்காக தான் இருவரும் அடிக்கடி பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் சந்திக்கின்றனர்.

படத்தை தயாரிக்க பல புரொடக்ஷன்கள் வரிசையாக முன் வந்துள்ளனர். இப்போது வரை இந்த செய்திகள் மட்டுமே கசிந்துள்ளன. சிம்பு மற்றும் தனுஷின் அடுத்த ப்ராஜக்ட்களை பார்க்கையில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு நிச்சயம் தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top