சினிமா

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே… ! சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் இயக்குனராக களமிறங்கும் தனுஷ் !

Dhanush SJ Suryah Vishnu Vishal Sun pictures

எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என அடுத்தடுத்து அடி வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை திருச்சிற்றம்பலம் திரைப்படம் மூலம் மீண்டும் பாதைக்கு அழைத்து வந்தவர் தனுஷ். மாறன் பட தோல்விக்குப் பின்பும் பல ஆண்டுகள் கழித்து நம் சொந்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஓர் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து நானே வருவேன் எனும் சுமாரான படத்தைக் கொடுத்தார்.

இந்த வருடம் வாத்தி, கேப்டன் மில்லர் என 2 படங்களைக் கையில் வைத்துள்ளார். அதற்கு பின்னர் நம் லிஸ்ட்டில் இல்லதா எதிர்பார்க்காத ஓர் டுவிஸ்ட்டை அளித்துள்ளார் தனுஷ். மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இம்முறை மல்டி ஸ்டாரர் படம் செய்யவுள்ளார். மேலும் அப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் இவரே பார்த்துக் கொள்ளவுள்ளார்.

Advertisement

நாயகனாக வழக்கம் போல இவரே வலம் வருகிறார். இவருடன் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளனர். கதை, திரைக்தை, வசனம், பாடல் வரிகள் போன்றவற்றில் இதுவரை தனுஷ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடைசியாக வந்த நானே வருவேன் படத்தின் கதையும் அவருடையது தான். மென்மையான அழகான பவர் பாண்டி படத்தை இயக்கிவரும் இவர் தான். கமல் ஹாசனைப் போல தனுஷும் சிறப்பான வெர்ஸடைல் ஆர்டிஸ்ட் தான்.

தனுஷ் எழுதும் ஸ்கிரிப்ட்க்கு மினிமம் கியாரண்டி. மேலும் பல ஆண்டுகள் கழித்து இயக்கவுள்ளார். அதையும் சிறப்பாகச் செய்தால் நிச்சயம் சன் பிக்சர்ஸ்க்கு ஷுயர் ஷாட் வெற்றி தான். இப்போது வரை இந்த மூன்று நடிகர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற நடிகர்கள், பணியாளர்கள் குறித்து எதுவும் வெளிவரவில்லை. பொங்கல் திருநாளுக்கு முன் அதிகாரபூர்வ அறிவிப்பை சன் நிறுவனம் வழங்கும்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top