Tuesday, December 3, 2024
- Advertisement -
Homeசினிமாராயன் படத்தில் அறிமுகமாகும் தனுஷ் மகன்.. ஆனா நடிகராக இல்லை.. பெரிய பொறுப்பை சுமந்துள்ள மகன்...

ராயன் படத்தில் அறிமுகமாகும் தனுஷ் மகன்.. ஆனா நடிகராக இல்லை.. பெரிய பொறுப்பை சுமந்துள்ள மகன் யாத்ரா

நடிகர் தனுஷ் அடுத்ததாக இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் ஒரு படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் மற்றொன்றை வாண்டர்பார் நிறுவனமும் தயாரிக்கிறது. அவரது இயக்கத்தில் தன் 50வது படமாக ‘ ராயன் ’ அமைந்துள்ளது. இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது.

- Advertisement -

இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா, வரலக்ஷ்மி என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன. தனுஷ் இயக்கம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் உள்ளது.

இதற்கு முன் தனுஷ் ‘ பவர் பாண்டி ’ படத்தை எழுதி இயக்கியிருந்தார். இப்படம் சிறப்பாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் எழுத்தாளராக, பாடல் ஆசிரியராக தனுஷ் பல்திறனில் தன்னை நிரூபித்துள்ளார். நானே வருவேன் படமும் அவரது கைவண்ணத்தில் உருவானதே.

- Advertisement -

ராயன் படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. இதில் ஒரு முக்கிய ரோலில் தனது மகனையும் சேர்த்துக் கொண்டு, கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்யவுள்ளார் தனுஷ். தனுஷின் இரு மகன்களில் மூத்த மகனா யாத்ரா இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஒளிபதிவாளராக. இது பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது.

- Advertisement -

தனுஷின் மகன் யாத்ராவுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும், தனது கரியரை ஒளிப்பதிவாளராக தொடர வேண்டுமென முடிவு செய்துள்ளார். தனது தந்தையின் படத்தில் அதனை துவங்கியுள்ளார். படத்தின் அறிவிப்பில் இவரது பெயர் இல்லை என்றாலும், யாத்ரா ஒளிப்பதிவில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக தனுஷ் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகன்களும் செல்கிறார்கள். கோலிவுட் வருகைக்கு இது சரியான சமயமே. ராயன் படம் அதிரடியான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இப்படம், பெரிய படையுடன் தனுஷின் எழுத்தில் மிகச் சிறப்பாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular