சினிமா

அண்ணன் – தம்பி மோதல்… ! ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் – செல்வராகவன் படம்… !

Dhanush Selvaraghavan

இந்த 2023 கோலிவுட்டில் மோதலுக்கான வருடம் போல் இருக்கிறது. முதலில் 8 ஆண்டுகளுக்குப் பின் அஜித் – விஜய் மோதினர். மார்ச் மாதம் சிம்பு – சிவகார்த்திகேயன் கிளாஷ் உள்ளது. இதற்கிடையே அண்ணன் – தம்பி ஜோடியான செல்வராகவன் – தனுஷ் பிப்ரவரி மாதம் மோதுகின்றனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து படம் செய்தது பத்தாமல் தற்போது எதிர் எதிராக மோதுகின்றனர்.

தனுஷ், சம்யுக்தா மேனன் சிறப்பிக்க, இயக்குனர் வெற்றி அலுறி இயக்கியுள்ள இருமொழிப் (தமிழ் – தெலுங்கு) படம் ‘ வாத்தி ’ ஆகும். இப்படம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக வேண்டியது, ஆனால் சில காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது. தற்போது பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மறுபக்கம் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள ‘ பகாசூரன் ’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகும் என மோகன் ஜி & கோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமூக வலைதளங்களில், விஜய் – அஜித் கிளாஷ் என்னடா கிளாஷு இங்க பாருங்கடா அதை விட பெரிய மோதல் இருக்கிறது என ரசிகர்கள் கமென்ட் செய்யத் துவங்கிவிட்டனர்.

வாத்தி படத்தின் பாடல்கள் & டிரெய்லர் மூலம் அப்படம் சாதாரண கமர்ஷியல் படம் எனத் தெளிவாக தெரிகிறது. அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் எதிர்பார்த்தது போல சமூக கருத்துகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய இரு படங்களும் இதே கேஸ் தான்.

Advertisement

இரு படக்குழுவினரும் தங்களது அடுத்தகட்ட பணியாக புரொமோஷனில் ஈடுபட்டுள்ளனர். தனித் தனியாக வந்திருந்தால் கூட இவ்வளவு கவனத்தை ஈர்திருக்காது போல. அண்ணன் – தம்பி மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top