Tuesday, November 19, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் தள்ளிப்போகும் துருவ நட்சத்திரம்.. சிவகார்த்திகேயனுக்கு அடித்த லக்

மீண்டும் தள்ளிப்போகும் துருவ நட்சத்திரம்.. சிவகார்த்திகேயனுக்கு அடித்த லக்

- Advertisement -

நாம் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சியை பார்த்திருந்தீர்கள் என்றால் உங்கள் குழந்தை பருவம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று அர்த்தம் என பல மீம்ஸ்களை பார்த்திருப்போம். அதேபோல் துருவ நட்சத்திரம் போஸ்டர் ஐ பார்த்திருந்தால் உங்கள் குழந்தைப் பருவம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று சொல்லும் அளவிற்கு கௌதம் வாசுதேவ் மேனன் எடுத்த படம் இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் டீசர் வெளியானது. இதனால் இந்த படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த டீசர் ரிலீஸ் ஆகும்போது ஒரு குழந்தை பிறந்திருந்தால் அது தற்போது ஆறு வயதாகி பள்ளிக்கு போயிருக்கும். இந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் கடும் முயற்சிகளை எடுத்து வந்தார்.

- Advertisement -

இந்த நிழலில் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்துடன் போட்டி போடும் வகையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு முன்னோட்டமாக படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் முடிவெடுத்து இருந்தார். ஆனால் தற்போது அதுவும் தள்ளிப் போகிறது. இதனால் படம் திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வருவது சந்தேகமாக உள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.

மாவீரன் திரைப்படம் தனியாகத்தான் திரைக்கு வரும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிவகார்த்திகேயன் படத்தின் வசூல் பாதிக்கப்படாது என தெரிகிறது.

எனினும் அடுத்த இரண்டு வாரத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பல பகுதிகளாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Most Popular