இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்தே திரைப்படத்தின் படப்பிடிப்பும் மற்ற பணிகளும் நடந்து வருகிறது. ஆனால் இடையில் ஏற்பட்ட கொரோனா மற்றும் திரைப்படத்திற்கு சில பைனான்ஸ் பிரச்சினைகள் இத்திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு தடையாகி விட்டது.
இப்படி ஏற்பட்ட பல தடைகளையும் மீறி இந்த திரைப்படத்தை தற்பொழுது எடுத்து முடிக்கும் முயற்சியில் பட குழுவினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்பொழுது இந்த திரைப்படத்தினுடைய இசை அமைப்பு பணி நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பான முறையில் இசையமைத்து வருகிறார்.
வருகின்ற மே மாதம் 19ஆம் தேதி இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று பட குழுவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
அதற்காக எல்லா வேலைகளிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். எவ்வளவு விரைவாக இந்த வேலைகளை முடிக்கின்றோமோ அவ்வளவு விரைவில் இத்திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் படக்குழுவினர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.
ஏறத்தாழ ஆறு, ஏழு வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இதற்கு இடையில் நடிகர் விக்ரமிற்கு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரமை ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் இருக்கும் இந்த நிலையில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டால் நிச்சயமாக ஒரு நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தையும் இயக்கி வெளியிட்டிருந்தார். இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது இவர்கள் இருவருமே இணைந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.