Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாசில்லா சில்லா துணிவு பாடலுக்கு வரவேற்பு.. விஜய் பாடல் சாதனையை முறியடித்ததா?

சில்லா சில்லா துணிவு பாடலுக்கு வரவேற்பு.. விஜய் பாடல் சாதனையை முறியடித்ததா?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் தலை என கொண்டாடப்படும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார்.  நடிகர் அஜித்திற்கு இதற்கு முந்திய படமான வலிமை ரசிகர்களிடையே கலவையான வரவேற்பையே பெற்றது. எதிர்பார்த்த அளவிற்கொன்றும் வெற்றியை அடையவில்லை.   இந்த நிலையில் கூட நடிகர் அஜித் அதே இயக்குனர் வினோத்தை வைத்து துணிவு திரைப்படத்தையும் நடித்து வருகிறார்.

துணிவு திரைப்படத்தின் உடைய முதல் பாடல் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் இசையமைக்கும் ஜிப்ரானுக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படம் ஆகும். ஏனெனில் இது ஜிப்ரான் இசையமைக்கும் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிப்ரான், 4088 நாட்கள் கழித்து 50வது திரைப்படம் என்ற மைல்கல்லை தொட்டு இருப்பதாக கூறியுள்ளார்.இது அஜித் சார் திரைப்படம் அமைந்தது நினைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் நான் என் திறமைக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இனி இந்தப் பாடல் உங்களுடையது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதில் இன்னும் ஒரு சுவாரசியமாக  இந்த  பாடலை இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகரான அனிருத் ரவிச்சந்திரன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையில் அனிருத் ரவிச்சந்திரனின் குரலில் வெளியான இந்த இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது. துணிவு திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுடைய ஆர்வத்தை இன்னும் அதிகமாகியுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் வெளியான இரண்டு மணி நேரத்தில் சில்லா சில்லா பாடல் 7 லட்சம் லைக்சை அள்ளி இருக்கிறது. எனினும் இது விஜய் அரபிக்குத்து , ரஞ்சிதமே பாடலின் சாதனைகளை உடைக்க தவறிவிட்டது. ரஞ்சிதமே பாடல் 7 லட்சம் லைக்ஸ்களை 1 மணி நேரம் 52 நிமிடத்திலும், அரபிக்குத்து பாடல் 58 நிமிடத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

Most Popular