Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாபீஸ்ட் சரிவிலிருந்து நெல்சன் மீண்டாரா? ரஜினி ரசிகர்கள் மனதை வென்றாரா நெல்சன்?

பீஸ்ட் சரிவிலிருந்து நெல்சன் மீண்டாரா? ரஜினி ரசிகர்கள் மனதை வென்றாரா நெல்சன்?

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் ஆரம்ப காலத்தில் பெரிய நடிகர்களின் படத்தை இயக்கி பெயரும் புகழும் பெறுகிறார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் பிறகு நெல்சன் பெரிய நட்சத்திரங்களை இயக்கி ஸ்டார் இயக்குனராக உருவாகி இருக்கிறார்.

- Advertisement -

அவர் இயக்கிய கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் ஜெயிலர் என நான்கு படங்களும் அவருக்கு ஹிட் இயக்குனர் என்ற பெயரை தந்தது. எனினும் திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் கிண்டல் மற்றும் கேலியையும் சந்தித்தது.

- Advertisement -

குறிப்பாக பீஸ்ட் படத்தின் விமர்சனத்தால் ஜெயிலர் படத்திலிருந்து ரஜினி விலகிவிடலாம் என நினைக்கும் அளவுக்கு சூழல் இருந்தது. எனினும் பீஸ்ட் திரைப்படம் வெற்றியைப் பெற்றதாலே அவர் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஜெய்லர் படத்தில் அவர் வெற்றியை பெற்றிருக்காரா இல்லையா பார்ப்போம். நடிகர் ரஜினிகாந்தை கடந்த 20 ஆண்டுகளில் இப்படி யாரும் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்ற பெயரை நெல்சன் ரசிகர்களிடம் இருந்து பெற்று இருக்கிறார்.

குறிப்பாக ஆக்சன் காட்சிகள் எல்லாம் தெறிக்கும் வகையில் இருக்கிறது. பாசம்,சென்டிமென்ட், காமெடி என மூன்றிலும் நெல்சன் பின்னி பிடல் எடுத்திருக்கிறார்.  இந்த வகையில் நெல்சன் வெற்றிப்பட இயக்குனராக மாறி இருக்கிறார்.

எனினும் நெல்சன் தனக்கென ஒரு பார்முலாவை வகுத்து அதில் தான் பயணம் செய்கிறார். இந்த பார்முலாவை நான் எக்காலத்துக் கொண்டு மாற்ற மாட்டேன். இது தான் என்னுடைய ஸ்டைல் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.

அந்த வகையில் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் படத்தின் வேகத்தை குறைத்து இருக்கிறது. ஆனால் இதற்கு ஏற்கனவே விளக்கம் அளித்த  நெல்சன்,  படத்தை ஒரே அளவு ஸ்பீடாக இயக்கக் கூடாது என்றும் இப்படி வேகத்தை குறைத்து தான் கூட்ட வேண்டும் என்றும்  கூறுகிறார்.

ஆனால் நமது ரசிகர்கள் படம் ஆரம்பித்தால் முடியும் வரை வேகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அந்த வகையில் இந்த ஒரு பாயிண்ட் மட்டும் நெல்சனுக்கு மைனஸ் ஆக இருக்கிறது.

பீஸ்ட் காட்டிலும் நெல்சன் எவ்வளவு சிறப்பான சம்பவத்தை ஜெய்லரில் செய்திருக்கிறார்.இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் எங்களுக்கு இப்படி ஒரு படம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டாயே என சமூக வலைத்தளத்தில் கலாய்க்கின்றனர்.

Most Popular