Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாவிக்ரமில் கமல் வைத்திருந்த குடோன் லியோவில் விஜய், சஞ்சய் தத் உடையதா?  என்ன பா சொல்றீங்க?

விக்ரமில் கமல் வைத்திருந்த குடோன் லியோவில் விஜய், சஞ்சய் தத் உடையதா?  என்ன பா சொல்றீங்க?

நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் கைதி கதையை பின் தொடர்ந்து எடுக்கப்பட்டது. இதனால் இதனை லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்று கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் விஜயின் லியோ திரைப்படமும் இந்த கதை களத்தை பின்தொடர்ந்து வருமா என்று எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. ஏற்கனவே நான் ரெடி பாடலில் தேள் கொடுக்கு சிங்கத்தை ஒன்றும் செய்யாதடா என்ற வரியும் ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.

தாஸ் அண்ட் கோ

இந்த நிலையில் நான் ரெடி பாடலில் ஒரு குடோனில் விஜய் நடனம் ஆடுகிறார். அப்போது சஞ்சய் தத் எல்லாம் கூட இருக்கிறார்கள். அப்போது பின்னால் உள்ள சுவற்றில் தாஸ் அண்ட் கோ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

விக்ரமில் இதே போஸ்டர்?

அது புகையிலை நிறுவனமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் கமல் ஒரு குடோனின் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பார். அது விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்வரும்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. அதில் கமல் நிற்கும் அந்த காட்சியின் பின்னால் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள டாஸ் அண்ட் கோ என்ற போஸ்டர் அதில் இடம்பெற்றிருந்தது. இதனை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் விக்ரமுக்கு முன்னால் நடந்த கதை தான் லியோவா என்று பலரும் சந்தேகித்து வந்தனர். இந்த நிலையில் அது ஒரு போலி புகைப்படம் என்பது தெரிய வந்தது. தாஸ் அண்ட் கோ என்ற வார்த்தையை விக்ரம் திரைப்படத்தில் நாம் பார்த்ததே இல்லையே என்று சந்தேகம் அடைந்த ரசிகர்கள் சிலர் மீண்டும் விக்ரம் திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள்.

போலி போஸ்டர்

அப்போது அந்த காட்சியில் அப்படி ஒரு போஸ்டரே இல்லை. இதனால் யாரோ சிலர் வேண்டுமென்றே ரசிகர்களை குழப்புவதற்காக தாசன் கோ என்று போஸ்டரை கமல் பின்னாடி ஒட்டி இருப்பது போல் எடிட்டிங் செய்திருப்பது தெரிய வந்தது.

லியோ படத்தின் கதை விக்ரமில் தொடர்பு இருக்காது என்றும் ஆனால் அந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கும் வகையில் கதைகளம் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Most Popular