நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படமான பெயரிடப்படாத சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டை கொண்ட படமாக உருவாகி வருகிறது. திசா பத்தாணி போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
இது 10 மொழியில் ரிலீஸ் ஆவதாகவும், 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றதாக அதிகாரப்பூர் தகவல் வெளியாகின.
இந்த நிலையில் தான் சூரியா 42 திரைப்படம் லியோவை விட அதிக வருமானத்தை ஈட்டியதாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வந்தார்கள். மேலும் படம் தொடர்பாக எந்த ஒரு வீடியோவும் ப்ரோமவும் ரிலீஸ் ஆகாத நிலையில் , இந்த சாதனை நிகழ்ந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம். சூர்யாவின் கடைசி திரைப்படமான எதற்கும் துணிந்தவன் ஒட்டு மொத்தமாக 50 கோடி ரூபாயைத்தான் திரையரங்கில் வசூலை பெற்றது. மேலும் netflix மற்றும் சன் என் எக்ஸ் டி யில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் வருமானமே 100 கோடி கூட தொடவில்லை. எப்போதுமே ஒரு ஹீரோயின் முந்தைய படங்கள் என்ன சாதனை செய்கிறதோ அதை வைத்து தான் அடுத்த படத்தை விற்பார்கள். இதில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சரியாக போகாத நிலையில் தற்போதைய புதிய திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் போனதாக வெளியான செய்தி துளியும் உண்மை கிடையாது.
#Suriya42 Pre Business Is Not Even Half Of #Leo Pre Business !!
— Analyst (@BoAnalyst) March 5, 2023
Budget Is Also Lesser Than Salary Of @actorvijay + @Dir_Lokesh !!
But Will Be The Highest Among All Tier 2 Films Currently !!
Lets Not Spread Lies And Fake Build Up To Sell Rights Desperately !!
மேலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் அளவு தான் வருமானம் கிடைத்திருக்கும். இது சூர்யா 42 திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளி வருவதால் முதல் பாகம் கிடைத்த வருமானத்தை வைத்து தான் இரண்டாவது பாகம் விற்கப்படும்.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் மட்டும்தான் பிசினஸ் செய்யப்பட்டது. அதை வைத்து தற்போது இரண்டாவது பாகம் அதிகளவிற்கு விற்கப்படும். இதனால் சூர்யா 42 திரைப்படத்தின் இரண்டு பாகமும் சேர்த்து பிசினஸ் 500 கோடி தாண்டியதாக வெளியான செய்தி பொய் ஆகும்.
மேலும் இது குறித்து தயாரிப்பு நிறுவனமோ இல்லை அதிகாரப்பூர்வ செய்தியோ எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தக நிபுணர் ஒருவர் சூர்யா 42 படத்தின் பிஸ்னஸை ஏற்றுவதற்காக இது போன்ற புரளி செய்தியை தயாரிப்பு நிறுவனமே பரப்பி விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.