Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாபீஸ்ட் vs துணிவு - நெட்பிளிக்சில் ரெக்கார்ட் படைத்தது யார்?

பீஸ்ட் vs துணிவு – நெட்பிளிக்சில் ரெக்கார்ட் படைத்தது யார்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக வசூல் படைத்தது யார் என்று நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே போட்டி நிலவி வரும். தற்போது காலம் மாறி வரும் நிலையில் போட்டியின் தன்மையும் மாறி வருகிறது. ஒரு காலத்தில் திரையரங்கில் ஒரு படம் எத்தனை நாள் ஓடியது என போட்டி வந்தது. அதன் பிறகு படத்தின் வசூல் என்ன என்று போட்டி மாறியது. தற்போது திரையரங்கில் இருந்து ஓடிடி காலமாக இது உருவாகியுள்ள நிலையில் ஓடிடியின் எந்த படம் சாதனை படைக்கிறது என்று தற்போது ரசிகர்கள் இடையே விவாதம் இருந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படம் netflixல் பெரிய சாதனை படைத்ததாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் முதல் மூன்று இடத்திலும் துணிவு படத்தின் தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகியவை தான் இருந்தது என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் நெட்பிளிக்சின் நிறுவனம் விஜய் நடித்த பீஸ்ட் படத்தையும் வாங்கி வெளியிட்டது .

- Advertisement -

தற்போது பீஸ்ட் படம் அதிக சாதனை படைத்ததா? அல்லது துணிவு சாதனை படைத்ததா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதன்படி முதல் ஐந்து நாட்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில் netflix அளித்துள்ள தகவலின்படி துணிவு திரைப்படம் 7.78 மில்லியன் நிமிடங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்பாகியுள்ளது.

- Advertisement -

இதன் மூலம் விஜயின் பீஸ்ட் படத்தை துணிவு திரைப்படம் முறியடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீஸ்டு திரைப்படம் சன் என் எக்ஸ் டி என்ற ஆப்பில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதனை விஜய் ரசிகர்கள் குறிப்பிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படத்தின் ஓ டி டி வெளியீடு அடுத்த வாரம் 22 ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular