Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு யூடியூப் ரெக்காட்ஸ்..பொய் சொன்னதா படக்குழு? உண்மை என்ன?

துணிவு யூடியூப் ரெக்காட்ஸ்..பொய் சொன்னதா படக்குழு? உண்மை என்ன?

- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள படம் துணிவு . இந்த படத்திற்கான ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், பொதுவான ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றது. இன்னும் இதில் அஜித்தின் மாஸ் லுக் ரசிக்கும் படி இருந்துதாக பலரும் பாராட்டினர். மேலும் துணிவு படத்தின் ட்ரெய்லர் பீஸ்ட் படத்தை ஞாபகப்படுத்துவது போல் இருப்பதாக பல்வேறு மீம்ஸ் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்தன.

இந்த நிலையில் துணிவு திரைப்படம் ட்ரெய்லர் 24 மணி நேரம் முடிவில் 3 கோடி பேர் பார்த்ததாக போனி கபூர் கூறியிருந்தார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர் காரணம் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இதே அளவிலான சாதனையை படைத்தது. ஆனால் துணிவு திரைப்படத்தின் டிரைலர் இரண்டு கோடியே 40 லட்சம் பேர் பார்வையாளர்களால் மட்டுமே பார்க்கப்பட்டது போல் யூடியூப் பக்கத்தில் காண்பிக்கப்பட்டது.

- Advertisement -

எனினும் யூ டியூபை பொறுத்தவரை அதிக பார்வையாளர்கள் பார்க்கும் போது அதன் எண்ணிக்கை மெதுவாக தான் அப்டேட் ஆகும். ஆனால் உண்மையான எண்ணிக்கை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று அந்த வீடியோவை பதிவிட்டவர்களுக்கு தான் தெரியும். அந்த வகையில் போனி கபூர் மூன்று கோடி பேர் பார்த்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை வெளியிட்டார். ஆனால் அது ஜோடிக்கப்பட்டது போல் இருப்பதாகவும் ரியல் டைம் ஒரு நாள் வரை எல்லாம் அப்டேட் ஆகாமல் இருக்காது என்றும் விஜய் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.மூன்று கோடி பேர் பார்த்தார்கள் என்றால் ஏன் வெறும் 12 லட்சம் லைட்ஸ்களை மட்டும் துணிவு பெற்றது என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏனென்றால் பீஸ்ட் திரைப்படம் 22 லட்சம் லைக்ஸ்களை 24 மணி நேரத்தில் பெற்றிருந்தது.

- Advertisement -

துணிவு டிரைலர், அஜித் படத்திற்கு இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. முன்னதாக அஜித்தின் விசுவாசம் படம் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் 24 நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்ற ட்ரெய்லர பீஸ்ட் முதலிடத்திலும், துணிவு இரண்டாவது இடத்திலும், பிகில் மூன்றாம் இடத்திலும், விக்ரம் நான்காம் இடத்திலும், விசுவாசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Most Popular