Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித்துடன் படம் செய்வது குறித்து அட்லீ.. எப்போது நடக்கும் தெரியுமா.. !

அஜித்துடன் படம் செய்வது குறித்து அட்லீ.. எப்போது நடக்கும் தெரியுமா.. !

இயக்குனர் அட்லீ கோலிவுட்டில் அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர்களை கொடுத்தப் பிறகு பாலிவுட் சென்று ஷாரூக் கானை இயக்கி பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். தற்போது தல அஜித்குமாரை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குனர் அட்லீ பேசியுள்ளார்.

- Advertisement -

தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தன் பக்கம் கவனத்தை எர்த்தார். அதன் பிறகு தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று மிகப் பெரிய ஹிட்களைக் தந்து கமர்ஷியல் படங்களுக்கு மினிமம் கியாரண்டி எனும் இடத்திற்கு நகர்ந்தார்.

பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1200 கோடிகள் வசூலை செய்துள்ளது. இதனை விட பெருமையான விஷயம் என்னவென்றால் பல பாலிவுட் ஹீரோக்கள் மத்தியிலும் வட இந்தியர்கள் மத்தியிலும் பிரபலத்தை சம்பாதித்ததுள்ளார் அட்லீ. உடனே அடுத்தப் படத்தையும் அங்கு இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில் அட்லீ சுவாரசியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ ஆரம்பம் படத்தின் போது நடிகை நயன்தாரா மூலம் அஜித்குமார் சாரை முதலியனசந்தித்தேன். அவர் என்னை மிகவும் பண்பாக விசாரித்தார். அவருக்கு ஒரு தரமான கதை இருக்கிறது. அவர் சரி எனக் கூறினால் ஷூட்டிங்க்கு கிளம்பலாம். ”

- Advertisement -

அஜித்குமார் – விக்னேஷ் சிவன் படம் கைவிடப்பட்ட போது பல இயக்குனர்கள் அஜித்திடம் கதை கூறினர். அதில் மகிழ் திருமேனி ஒப்பந்தம் ஆகினார். இருப்பினும் இடையில் அஜித் – அட்லீ – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் படம் தயாரகப் போகிறது என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் எதுவுமே அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.

அஜித்குமார் தன் 62வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அட்லீயும் பாலிவுட்டில் மீண்டும் ஓர் படம் செய்யவிருப்பதால் 63வது படத்தில் இந்தக் கூட்டணியை நாம் எதிர்பார்க்கலாம்.

Most Popular