Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாகாப்பி அடிச்சே கோடீஸ்வரன் ஆயிட்டியே.. அது எப்படிண்ணா? அட்லியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

காப்பி அடிச்சே கோடீஸ்வரன் ஆயிட்டியே.. அது எப்படிண்ணா? அட்லியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கான் வைத்து இங்கே இருக்கும் ஜாவான் திரைப்படத்தைப் பற்றிய தகவல் தான் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

தமிழில் ராஜா ராணி தெறி பிகில் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி ஹிந்தியில் முதன் முதலில் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ஜாவான்.

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என்ற ஃபேன் இந்தியன் மொழிகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து தன்னுடைய முதல் ஹிந்தி திரைப்படத்தையே இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

  இயக்குனர் அட்லி இத்திரைப்படத்தினுடைய ட்ரெய்லர் மூன்று வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் 100 மில்லியனுக்கும் மேற்பட்டபார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு திரைப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பினை வைத்திருக்கிறார்கள்.மேலும் இந்த திரைப்படத்தின் மீது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சாருக் கானின் நடனத்தில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் எந்த இடம் என்ற ஒரு பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டது.

இந்த பாடலும் வெளியிடப்பட்ட குறுகிய நேரத்திலேயே நிறைய பார்வையாளர்களால் கவரப்பட்டது. இந்தப் பாடலின் ஷாருக்கான் உடைய நடனமும் அனிருத்தின் இசையும் பல கோடி ரசிகர்களை ஒன்று திரட்டி வைத்திருக்கிறது.இந்த வரவேற்புகளை பார்க்கும் பொழுது இந்த திரைப்படம் நிச்சயமாக ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்று தோன்றுகிறது.

கடந்த ஜூலை இரண்டாம் தேதி திரைப்படம் வெளியிடப்பட இருப்பதாக கூறப்பட்டது.ஆனால் சில காரணங்களால் தற்பொழுது இந்த திரைப்படத்தை செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இயக்குனர் பாலிவுட்டில் முதன் முதலாக இயக்கிய படத்திலிருந்து ஷாருக்கான் வைத்து இயக்கியிருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய பெயராக அமைந்து விட்டது. இதை காரணமாக வைத்து இயக்குனர் அட்லி தற்பொழுது இயக்கப் போகும் எல்லா திரைப்படங்களிலும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். பொதுவாக 35 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் இயக்குனர் அட்லி.

ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இயக்குனர் அட்லி அந்தத் திரைப்படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம் இயக்குனர் அட்லி. மேலும் இத்திரைப்படம் இவருக்கு கொடுக்கப் போகும் வெற்றியை வைத்து இன்னும் இவர் எவ்வளவு சம்பளம் கேட்கப் போகிறாரோ என்ற அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

Most Popular