Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்ஹீரோக்களை மிஞ்சிய அட்லி.. அடுத்த பட சம்பளத்தை கேட்டு மிரண்ட கோலிவுட்.. கேட்டாலே தல சுத்துதே

ஹீரோக்களை மிஞ்சிய அட்லி.. அடுத்த பட சம்பளத்தை கேட்டு மிரண்ட கோலிவுட்.. கேட்டாலே தல சுத்துதே

ஜவான் படத்திற்குப் பின் பாலிவுட் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திர இயக்குனராக மாறிவிட்டார் அட்லி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பின் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதிலும் 1100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

தமிழில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அப்போதே நல்ல காதல் கதையம்சம் கொண்ட படமாக இருந்ததால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த தெறி திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பிளாக்பஸ்டர் விருந்தாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு தளபதி விஜய் ஆக்சன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் சீன்களிலும் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இதற்கு அடுத்த படமும் தளபதி விஜய் உடன் என்ற போதே கோலிவுட் வட்டாரம் தீ பிடிக்கத் தொடங்கியது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான மெர்சல் திரைப்படமும் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

- Advertisement -

சாதுவான மருத்துவர், மிரட்டலான மேஜிக் மேன் மற்றும் மதுரை மைந்தன் என மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வழங்கியிருப்பார் விஜய். மேலும் ஜிஎஸ்டி குறித்த சமூகப் பிரச்சினைகளை கையில் எடுத்ததால் இப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. மூன்றாவதாகவும் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் என்ற போதே ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.

- Advertisement -

இவர்களது கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம் விமர்சன ரீதியாக சில குறைகள் இருந்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. தளபதி விஜய் ராயப்பன் என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதற்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு இயக்குனர் அட்லி 50 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், அடுத்ததாக இயக்கப் போகும் ராம்சரண் திரைப்படத்திற்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனரும் அட்லிதான். இந்தியன் 2 திரைப்படத்திற்காக சங்கர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் 50 கோடி ரூபாய்.

இதற்கிடையில் தளபதி விஜய் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரணின் படத்தில் இயக்குனர் அட்லி கமிட்டாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Most Popular