Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாஇது வித்தியாசமான படமாக இருக்கும்.. விசால் படம் குறித்து இயக்குநர் ஹரி நம்பிக்கை

இது வித்தியாசமான படமாக இருக்கும்.. விசால் படம் குறித்து இயக்குநர் ஹரி நம்பிக்கை

நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைந்து படத்தை இயக்குவது மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுடன் மூன்றாவது முறையாக படத்தில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த படம் மற்ற படங்களைப் போல் ஆக்ஷன் காட்சி நிறைந்த படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள இயக்குனர் ஹரி, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இது அமையும் என்று கூறினார். எனினும் மற்ற இரண்டு படங்களைப் போல் இல்லாமல் இதில் புது விதமான கதைக்கோணத்தை தான் தேர்ந்தெடுப்பதாகவும் படத்தின் ஓட்டம் வித்யாசமாக இருக்கும் என்றும் இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.

இந்தப் படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால் கடைசியாக நடித்த ஏழு படங்களும் தோல்வி  தழுவியது. தற்போது அவர் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான கதை தளத்தை கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எனினும் அந்தப் படத்தின் விஷாலின் தோற்றமே செம காமெடியாக இருப்பதால் படம் பெரியளவுக்கு ஓடாது என ரசிகர்கள் இப்போது பேசி வருகின்றனர். இதனால் நடிகர் விஷால் தன்னுடைய பழைய பானியான ஆக்சன் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.

- Advertisement -

அதன் ஒரு பகுதி தான் ஹரியுடன் கைகோர்த்து இருக்கும் திரைப்படமாகும். இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் உடன் விஷால் இணை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எனினும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Most Popular