சினிமா

ரோலக்ஸ் திரைப்படம் எப்போது.. ? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. !

Rolex Surya Lokesh Kanagaraj

கடந்த ஆண்டு படத்தின் கிளைமாக்சில் 5 நிமிடம் மட்டுமே வருகை தந்து திரையரங்கையே அதிர வைத்தார் சூர்யா. அனிருத்தின் தீயான இசையில் வலம் வந்து அடியாளின் தலையை துண்டாக்கி பார்வையாளர்களை நோக்கி ரோலக்ஸ் சிரிக்க திரையரங்கெங்கும் கைதட்டல்கள் விசில்கள் என அமர்திருந்த அனைவரும் உற்சாகத்தில் குதித்தனர். விக்ரம் திரைப்படத்தில் அவர் செய்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு நட்சத்திரங்கள் பலர் பாராட்டுக்களை குவித்தனர்.

ரோலக்ஸ் வரும் காட்சியில் கைதி மற்றும் விக்ரம் திரைப்படம் கூடுகிறது. இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாகியுள்ளது. ஹாலிவுட்டில் மார்வல், டி.சி போல இங்கு நமக்கு இது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு லோகேஷ் கனகராஜ் இந்த யூனிவர்ஸில் கவனம் செலுத்துவதாக கூறினார்.

Advertisement

மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக இளையதளபதி விஜய்யுடன் கைகோர்த்து லியோ படத்தில் பணிபுரிந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஆயுத பூஜைக்கு வெளியாகும் இப்படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. விஜய்யின் இந்த படம் எல்.சி.யூவில் சேருகிறதாக அல்லது தனிப்படமா என்பதை இன்னும் குறிப்பிடவில்லை.

இயக்குனர் லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கைதி 2 அல்லது விக்ரம் 2 படத்தை இயக்கவுள்ளார். எது என்பதைப் பற்றி அதிகாரபூர்வமாக கூறவில்லை, ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த இரண்டில் எதேனும் ஒன்று என நம்பிக்கையாக கூறியுள்ளார்.

Advertisement

அண்மையில் விகடன் விருது விழாவில் கமல்ஹாசன், சூர்யா, லோகேஷ் கனகராஜ் மூவரும் ஒரே மேடையில் நின்றனர். சிறந்த நடிகர் விருதை சூர்யாவுக்கு இருவரும் வழங்கினர். அப்போது சூர்யாவை வைத்து இயக்கும் இயக்கவுள்ள படத்தின் அப்டேட்டை கொடுத்தார் லோகேஷ். அவர் கூறியதாவது, “ சூர்யா சாரை வைத்து நிச்சயம் படம் செய்வேன். அப்படத்தை 150 நாட்களில் முடித்துவிடுவேன். ” என்றார்.

ஆனால் அது ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் படமா அல்லது தனித்துவமான படமா என அவர் குறிப்பிடவில்லை. ஏற்கனவே நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் செய்ய போவதாக 4 – 5 ஆண்டுகளுக்கு முன் செய்திகள் பரவின. ஆனால் லோகேஷ் அடுத்த சில ஆண்டுகள் எல்.சி.யூவில் பணிபுரியவுள்ளதால் ரோலக்ஸ் திரைப்படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதா கணிப்பு.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top