Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 அப்டேட் வெளியிட்ட லோகோஷ் கனகராஜ்..! கல்லூரி நிகழ்ச்சியில் பேச்சு

தளபதி 67 அப்டேட் வெளியிட்ட லோகோஷ் கனகராஜ்..! கல்லூரி நிகழ்ச்சியில் பேச்சு

- Advertisement -

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இணைந்துள்ள திரைப்படம் தான் தளபதி 67. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் விக்ரம் என்ற மாபெரும் ஹிட் கொடுத்த பிறகு லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை விஜயை வைத்து இயக்குகிறார். இது விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா இல்லை இது மாஸ்டர் போல் வேறு கதைகளைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டது. இதில் காபி ஷாப் ஒன்றில் விஜயும் மிஸ்கினும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தளபதி 67 படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சுதீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்துள்ள மைக்கேல் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

- Advertisement -

இதில் லோகேஷ் கனகராஜ், சுதீப் கிஷன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ் இடம் தளபதி 67 அப்டேட் குறித்து மாணவர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் தாம் படித்த கல்லூரியில் தளபதி 67 குறித்து எதுவும் பேசாமல் சென்றால் நன்றாக இருக்காது. எனினும் நான் உங்களுக்கு ஒரு ஹிண்டு கொடுக்கிறேன். பிப்ரவரி ஒன்று ,இரண்டு, மூன்று ஆகிய மூன்று நாட்களில் ஏதேனும் ஒரு நாள் தளபதி 67 குறித்து அப்டேட் வெளிவரலாம் என்று லோகேஷ் கனகராஜ் கூறினார்.

- Advertisement -

இதை கேட்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். குடியரசு தினம் முன்னிட்டு தளபதி 67 படத்தின் அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு திரைப்படம் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் தேவையில்லாமல் ரசிகர்களின் கவனத்தை திருப்ப வேண்டாம் என்பதற்காக இந்த அப்டேட் ஒரு வாரம் தள்ளிப் போய் உள்ளதாக சினிமா வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

Most Popular