Friday, November 29, 2024
- Advertisement -
Homeசினிமாவேள்பாரி நாவல் குறித்து மணிரத்னம் பேச்சு.. தெலுங்கு ரசிகர்களுக்கும் பதிலடி

வேள்பாரி நாவல் குறித்து மணிரத்னம் பேச்சு.. தெலுங்கு ரசிகர்களுக்கும் பதிலடி

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சினிமா உலகமே கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த திரைப்படத்தை படமாக்குவது இயக்குனர் மணிரத்தினத்தில் நீண்ட கால கனவாகும். அது கடந்த 2022 ஆம் ஆண்டு நிஜமானது.

இந்தத் திரைப்படத்தில் வந்த கதாபாத்திரங்கள் எல்லாம் பார்ப்பதற்கு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே படமாக பார்ப்பது போன்று எண்ணம் ஒவ்வொரு ரசிகர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இத்தனை காலம் காத்திருந்தாலும் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல நாவல்கள் அன்றைய காலகட்டத்தில் சிறந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டு இருக்கிறது. அதிலும் எழுத்தாளர் எஸ் வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவல் பொன்னியின் செல்வதற்கு நிகராக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த நாவலையும் படமாக்க சிலர் முயற்சித்து கைவிட்டனர்.  இதைப் பற்றி இயக்குனர் மணிரத்தினத்திடம்,வேல்பாரி நாவலை நீங்கள் படமாக்க உள்ளீர்களா என கேட்ட பொழுது இந்த வேள்பாரி நாவலை நான் படமாக்க போவதில்லை. இதை என்னுடைய நண்பன் படமாக்க இருக்கிறார் என்று கூறியிருந்தார். அதையும் தான் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இயக்குனர் சங்கர் வேள்பாரி நாவலை சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மணிரத்தினம் சங்கரை தான் குறிப்பிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். சாதாரணமான திரைப்படத்தை இயக்குனர் சங்கர் பிரம்மாண்டமாக தான் இயக்குவார். இது பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த திரைப்படத்தை எப்படி இயக்கப் போகிறாரோ ஷங்கர் என்று ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இயக்குனர் மணிரத்தினத்திடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றி தெலுங்கு ரசிகர்கள் குறை கூறியதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இல்லாத ஒரு காட்சியை மிகைப்படுத்தி காட்டாமல் நாவலில் உள்ளது போன்ற காட்சியை படமாக எடுப்பது தான் என்னுடைய நோக்கம்.

அதைத்தான் நான் செய்தேன். என்னுடைய வேலையை நான் சரியாக செய்து விட்டேன். இது யார் என்ன கூறினால் என்ன என்று தெலுங்கு ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இயக்குனர் மணிரத்தினம் தெலுங்கு சினிமாவில் ஒரு காட்சியை பல மடங்கு வகைப்படுத்தி காட்டுவது தான் வழக்கம்.அதை சுட்டிக் காட்டும் வகையில் இவருடைய பதிலடி இருந்திருக்கிறது.

Most Popular