தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் .இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கும் நிலையை ஆத்திரத்துடன், நுணுக்கமாகவும் ,அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கும் திறன் படைத்த இயக்குனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் என்ற மூன்று திரைப்படங்களும் இவர் இயக்கத்தில் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படங்களாகும். அதிலும் பரியேறும் பெருமாள் ஒவ்வொரு காட்சி யையும் மிக அழகாகவும் எந்தவித சர்ச்சையும் ஏற்படாத அளவிலும் நினைத்ததை நினைத்தபடி படமாக்கி பெயர் பெற்றவர்.
இந்நிலையில் சமீபத்தில் எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் என்று விடுதலை சிறுத்தை கட்சி ஒரு விழா நிகழ்ச்சியை நடத்தியது .அதில் இயக்குனர் மாரி செல்வராஜிறக்கு எழுச்சித்தமிழர் விருது வழங்கப்பட்டது. அதை குறித்து அவர் சில நிமிடங்கள் மேடையில் பேசினார். அதில் அதிகமாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவனை பற்றி அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் இயக்குனர் மாரி செல்வராஜ் நான் பாரதிராஜா கையால் முதலில் வாங்கியப்ப விருதை என்னை அறியாமலேயே அண்ணன் திருமாவளவனிடம் கொண்டு கொடுத்தேன். அதை அவர் வாங்கி என்னை அணைத்தது தான் என் வாழ்விலேயே மிகச்சிறந்த தருணம். அந்த நிமிடம் அந்த விருது வாங்கியதன் பலன் கிடைத்தது போல் உணர்ந்தேன் அந்த விருது அவர் கையில் இருப்பது தான் அதற்கு மதிப்பு என்று கூறினார்.
அதேபோல் நான் ஒரு திரை கதையை இயக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்காக கதை எழுதும்போது எனக்குள் ஒரு கேள்வி வரும் இதை எப்படி படம் ஆக்குவது. நாம் எப்படி படமாக்கினால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் .அது நாம் என்ன நினைத்து இயக்கினோமோ அந்த அர்த்தத்தில் வெளிப்படும். சென்சார்கள் எது போன்ற காட்சிக்கு ஒப்புக்கொள்வார்கள்.
இது போன்ற சர்ச்சைகள் எல்லாம் பல விஷயங்களை யோசித்து ஒரு திரைக்கதையை இயக்கவேன் பிற இயக்குனர்கள் எல்லாம் மனம் போனபோக்கு தன் கதையை இயக்குவார்கள் ஆனால் என்னுடைய இயக்கம் முறை இப்படித்தான் இருக்கும் என்று குறிப்பிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ.
அந்தக் குழப்பமான சமயத்தில் நான் அண்ணன் திருமாவளவனின் உடைய காணொளிகளை தான் காண்பேன் அவருக்குள் அவ்வளவு ஒரு கோபம் இருக்கும்,ஆக்ரோஷம் இருக்கும், அநியாயத்தை தட்டிக் கேட்க தைரியம் இருக்கும் ஆனால் எந்த ஒரு நிமிடமும் அவர் தன்னுடைய நிதானத்தை இழந்தது போன்ற காட்சியை நான் கண்டதே இல்லை .அதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய ஒரு செய்தி. அந்த நிதானத்தை தான் நான் தற்பொழுது பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய திரைப்படங்களில் முக்கிய கருத்தான இடங்களில் எப்படி அதை படம் ஆக்க வேண்டும் என்ற சிக்கல் எனக்குள் வரும்பொழுது என் அண்ணன் திருமாவளவன் தான் நினைவுக்கு வருவார் .அவருடைய நிதானத்தை தான் நான் அதில் கையாண்டு இருப்பேன் என்று திருமாவளவனை உயர்த்தி கூறியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அதேபோல் இதுவரை என்னுடைய திரைப்படங்களில் என்னுடைய நிஜத்தை தான் காட்டி இருக்கிறேன் தவிர என் கோபத்தை காட்டவில்லை .என் கோபத்தை படமாக்குவது இயலாத ஒன்று. அந்த அளவிற்கு கட்டுபாடற்றது எனக்குள் இருக்கும் கோபம். என் கோபத்தை படமாக்கினால் சென்சர்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார் இயக்குனர் மாரி செல்வராஜ்.