நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், முதல் ஐந்து நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது அவர்களுடைய மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் இயக்குனர் மிஸ்கின் அளித்துள்ள பேட்டி தற்பொது சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.
விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் தளபதி 67. இதில் மாஸ்டருக்கு பிறகு விஜயுடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார். இதனாலயே இந்த படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் நிகழ்ச்சி ஒன்று பேசிய இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் 67 திரைப்படத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு நேரடியாக இங்கு வருகிறேன் என்று கூறினார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் இணைந்து படம் செய்வதாக குறிப்பிட்டுள்ள மிஸ்கின், யூத் படத்தில் நடித்ததை விட தற்போது மிகவும் யூத்தாக இருப்பதாக பாராட்டினார்.
தற்போது விஜயுடன் ஒரு சண்டைக் காட்சியில் நடித்ததாகவும் அதில் விஜய் என்னை அடித்து முகம் முழுவதும் ரத்தமாக்கி விட்டதாக தெரிவித்தார். லோகேஷ் கண்ணகராஜ் படத்தை சிறப்பாக செய்வதாகவும் ஏ, பி என்று இரண்டு புள்ளிகளை கனெக்ட் ஆகும் வகையில் படத்தை நகர்த்திச் செல்வதாக மிஸ்கின் கூறினார். மேலும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லி தருவதை விட எனக்கு இதுதான் சார் வேண்டும் பார்த்து பண்ணி கொடுங்க என்று புரியும் வகையில் லோகேஷ் கனகராஜ் கூறுவதாக மிஸ்கின் பாராட்டினார்.
இதன் மூலம் நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அதை செய்ய லோகேஷ் முழு சுதந்திரம் அளிப்பதாகவும் மிஷ்கின் பாராட்டினார். தளபதி 67 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாகவும் குறிப்பிட்ட மிஸ்கின் படம் சிறப்பாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதத்தில் எல்லாம் முடிந்து விடும் என்றும் ஆயுத பூஜை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.