சினிமா

விழாவில் நெல்சனுக்கு ஏற்பட்ட அவமானம்.. உலகமே இப்படி தான்!

எங்கள மாதிரி பசங்க ஒரு முறை ஜெயித்தால் போதாது ஒவ்வொரு முறையும் ஜெயிக்க வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் தற்போது நிஜ வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. வெற்றி பெற்றால் மட்டுமே இந்த உலகம் நம்மை மதிக்கும் என்பதை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிரூபித்து இருக்கிறது.

Advertisement

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். இதை அடுத்து தளபதி விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை கொடுத்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும்,வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. எனினும் படம் எதிர்பார்த்தது போல் இல்லை எனக் கூறி விஜய் ரசிகர்கள் நெல்சனை கடுமையாக ஓட்டினர்.

மேலும் தற்போது நெல்சன் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து வெற்றி படங்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாதுகாவலர்கள் படை சூழ்ந்து நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்துச் சென்றனர். வாசல் முதல் மேடை வரை அவர் பாதுகாவலர் உடன் வந்தார். அதே சமயம் இயக்குனர் நெல்சன் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரை வாசலில் இரண்டு மூன்று பாதுகாவலர்கள் வரவேற்றவுடன் அப்படியே நின்று விட்டார்கள். இயக்குனர் நெல்சன் மற்றும் ரெடிங் கிங்சிலி தனியாக தான் நடந்து வந்தனர். அவர்களை வழிநடத்தி வர ஒரு பாதுகாவலர் கூட வரவில்லை.

இதில் என்ன வருத்தமான விஷயம் என்றால் விழா மேடை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாமல் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்து  ஒரு விழா ஏற்பாட்டாளர் நேராக போங்க அப்படி என்று கையை காண்பித்து சொன்னார். இதனை அடுத்து இருவரும் தனியாக நடந்து சென்றார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெல்சன்க்கு ஏற்பட்ட இந்த அவமானம் அதிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் நெல்சன் ஜெய்லர் படத்தின் மூலம் திரும்பி வெற்றி கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top