சினிமா

விக்ரம் 61 படத்தின் பூஜை இன்று ! 3டி படமாக உருவாகும் வரலாற்று கதை

Chiyaan Vikram 61

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் பா ரஞ்சித்.தற்போது முதல் முறையாக இயக்குனர் பா. ரஞ்சித்தும் சியான் விக்ரமும் கைகோர்த்து படம் ஒன்றில் பணியாற்றுகின்றனர். இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம் தனக்கே உரிய ஸ்டைலில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.நடிகர் விக்ரமுக்கு இது 61வது திரைப்படம் ஆகும்.

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர் விக்ரம் கோப்ரா திரைப்படம் வரும் 12ஆம் தேதியும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதியும் துருவ நட்சத்திரங்கள் திரைப்படம் விரைவிலும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது விக்ரம் அடுத்த படத்தின் பணியை தொடங்கி விட்டார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தாண்டவம் திரைப்படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விக்ரம் 61 படத்திற்காக இணைந்துள்ளார்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எடுக்கிறார். வரலாற்று கதை ஆன எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 3டியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.நடிகர் விக்ரம் அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவரது உடல்நலம் குறித்து பல்வேறு தவறான செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அதை உடைக்கும் வகையில் நடிகர் விக்ரம் பம்பரம் போல் சுழன்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று கெத்து காட்டி இருக்கிறார். பா. ரஞ்சித் திரைப்படம் என்றாலே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அந்த படம் ஒலிக்கும்.

மெட்ராஸ், கபாலி ,காலா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விளையாட்டை மையமாக வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை கடந்த ஆண்டு இயக்குனர் ரஞ்சித் எடுத்தார்.இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அமேசானில் கடந்த ஆண்டு அதிக முறை பார்க்கப்பட்ட படங்கள் பட்டியலில் இடம் பெற்றது. தற்போது நட்சத்திரங்கள் நகருகிறது என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ள இயக்குனர் பா ரஞ்சித் அதன் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த பணிகள் முடிந்தவுடன் விக்ரம் 61 படத்தில் படப்பிடிப்பை தொடங்கி விடுவார் நடிகர் விக்ரமும் ரஞ்சித்தும் இணைந்து இருப்பது சினிமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top