Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினிக்கு அரசியல் தெரியவில்லை.. ராமர் கோவில் திறப்பு விழாவில் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்

ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை.. ராமர் கோவில் திறப்பு விழாவில் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் பா.ரஞ்சித்

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது. இதில் இந்தியாவின் பல்வேறு பெரிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய சில வார்த்தைகளை எதிர்த்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

- Advertisement -

ரஞ்சித்தின் தயாரிப்பில் அவரது நண்பர் ஜெயகுமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ ப்ளூ ஸ்டார் ’ ஆகும். இதில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பகவதி பெருமாள், இளங்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இப்படத்தைப் பற்றிய பேசிய ரஞ்சித் கூடுதலாக சில அரசியலையும் பெற்றார்.

அவர் பேசியதாவது, “ இன்று மிகவும் முக்கியமான நான். வீட்டிற்க்கு சென்று நாம் கற்பூரம் ஏற்றவில்லையென்றால் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி நம் நாடு போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து முதல் பத்து வருடங்களில் மிகவும் மோசமான இந்தியாவில் இருப்போம் என்ற அச்சம் உள்ளது. ”

- Advertisement -

“ பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் தன் இந்தக் கலை. மக்களைச் சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன். ராமர் கோவில் திறப்புக்குப் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. ” என்றார்.

- Advertisement -

அயோத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகளை எதிர்த்தும் ரஞ்சித் பேசினார். ரஜினிகாந்த், “ ராமர் ஆசீர்வததில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள். ” என்றுள்ளார். மேலும், 500 ஆண்டுச் சிக்கலை மோடி தீர்த்து வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு ரஞ்சித், “ கோவில் கூடாது என்பது எந்த வகையிலும் பிரச்சனை இல்லை. ரஜினி ராமர் கோவிலுக்கு சென்றது அவருடைய விருப்பம். ஆனால் சொன்ன அந்த 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்தது எனது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. ” என சுமூகமாக தாக்கியுள்ளார்.

Most Popular