நடிகர் விஜய் ஆக்சன் ஹீரோ ஆனதே தனது படத்தில் நடித்தது தான் காரணம் என்று இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கருமேகங்கள் கலைகிறது என்ற படத்தில் நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் பங்கேற்றார்.
இதில் பேசிய அவர் நான் முதலில் துணை இயக்குனராக பாரதிராஜாவிடம் தான் பணியாற்ற நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. என் மகன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பட்டவுடன் நான் முதலில் ஒரு ஆல்பம் ரெடி செய்தேன்.
என் படத்தில் நடிப்பதை விட என்னை விட பெரிய இயக்குனர் படத்தில் அறிமுகமானால் சிறப்பாக இருக்கும் என்று கூறி இயக்குனர் பாரதிராஜாவை நான் சந்தித்தேன். அப்போது எங்களுக்கு இருந்த நட்பை வைத்து என் மகனை வைத்து படம் எடுக்க முடியுமா என்று கூறினேன்.
ஆனால் அதற்கு பாரதிராஜா நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே உன் மகனை வைத்து எடு என்று கூறி மறுத்துவிட்டார். என் மகனை வைத்து இயக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் சொல்லிவிட்டார் .
இதேபோன்று என்னுடைய நண்பர்கள் பலரிடம் சென்று விஜய் வைத்து படம் இயக்க கூறினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சரி கடைசியாக நானே விஜயை வைத்து படம் இயக்கினேன். நான் இயக்கியதாலோ என்னவோ நடிகர் விஜய் தற்போது ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து விட்டார்.
இது அனைத்துமே கடவுளின் செயல்தான். ஒவ்வொரு தந்தையுமே தன்னுடைய மகனுக்கு லட்சிய தந்தை தான். தங்கள் மகன் அல்லது மகள் பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஒவ்வொரு தந்தையும் இருக்க வேண்டும் என்றும் எஸ்.ஏ சந்திரசேகர் கூறினார் .
நானும் பாரதிராஜாவும் நண்பராக இருந்தாலும் தொழிலில் ஒன்றாக பணியாற்றவில்லை. தற்போது இந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் தங்கர்பச்சான்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். இந்த படத்தில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.தங்கர்பச்சான் இந்த படத்தை இயக்குகிறார்.