Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமாஒரு கட்டத்தில் விவசாயம் பார்க்க போகலாம்னு நினைத்தேன்.. இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!

ஒரு கட்டத்தில் விவசாயம் பார்க்க போகலாம்னு நினைத்தேன்.. இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய  இயக்குனர்களின் ஒருவரான சங்கர் தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். அதே சமயத்தில் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் அளித்துள்ள பேட்டி, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் இத்தனை ஆண்டுகளாக ஊக்கத்துடன் படம் எடுத்து வருவதற்கான பின்னணி காரணம் என்ன என்று நெறியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் சங்கர், நாம் இன்னும் திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தான் தம்மை இன்னுமும் ஓட வைப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

ஹாலிவுட் படங்களை எல்லாம் பார்க்கும் போது நாம் இன்னும் எதுவும் செய்யவில்லை என்ற உணர்வு தமக்குள் இருப்பதாகவும் ஷங்கர் குறிப்பிட்டார். ஹாலிவுட்டில் ஜாஸ் போன்ற படத்தை அப்போதே எடுத்துவிட்டார்கள் என்றும்,நாம் ஜாஸ் எடுக்கும்போது அவர்கள் ஜுராசிக் பார்க் லெவலுக்கு சென்று விட்டதாகவும், நாம் ஜுராசிக் பார்க் லெவலை எட்டும் போது அவர்கள் அவதார் என்ற பிரம்மாண்ட படத்தை உருவாக்கி விட்டதாகவும் இயக்குனர் சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சில ஹாலிவுட் படங்களை எல்லாம் பார்க்கும் போது நாம் ஏன் இயக்குனராக இருக்கிறோம். பேசாமல் ஊருக்குச் சென்று விவசாயம் செய்து விடலாம் என்றும் தமக்கு தோன்றும் என்று சங்கர் கூறியுள்ளார். வெளிநாட்டு கலைஞர்கள் எல்லாம் தங்களது தொழிலில் பயபக்தியுடன் இருப்பதாக குறிப்பிட்ட ஷங்கர், காலை 9 மணிக்கு வந்தார்கள் என்றால் மாலை 6 மணி வரை தேவையில்லாமல் எந்த பிரேக்கும் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

நமது ஊரில் வேலைக்கு வந்தவுடன் 10 நிமிடம் வேலை பார்த்துவிட்டு டீ குடிக்க செல்கிறேன், அங்கு செல்கிறேன் என நேரத்தை கழிப்பார்கள். ஆனால் வெளிநாட்டு கலைஞர்கள் கண்ணும் கருத்துமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரேக் தவிர வேறு எந்த இடைவெளியும் எடுக்க மாட்டார்கள் என ஷங்கர் கூறினார்.

இதைப் போன்று வெளிநாட்டு ஒப்பனை கலைஞர்கள் அடுத்த நாள் என்ன மேக்கப் தேவை என்பதற்காக முதல் நாள் மாலையே குறிப்பு போல் எடுத்துக்கொண்டு அதனை அடுத்த நாள் காலையில் சரியாக எடுத்து வருவார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படிப்பட்ட வேலை நேர்த்தி நமது ஊரில் பார்க்க முடியவில்லை என்று இயக்குனர் சங்கர் கூறினார்.

Most Popular