தமிழ் சினிமாவில் அதிக வசூல் குவிக்கும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது சங்கர் தான். இவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் தமிழ் சினிமாவில் பல வரலாற்று சாதனைகளை படைத்திருக்கிறது. முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை செய்திருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் எடுத்த 2.0 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை குவிக்கவில்லை. மேலும் இயக்குனர் சங்கர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரத் தொடங்கியது. இதனால் கடுப்பான சங்கர், இனி தமிழ் படங்களை எடுக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு தெலுங்கு பக்கம் சென்றார்.
நடிகர் சிரஞ்சீவி மகனான ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்க இயக்குனர் சங்கர் முடிவு எடுத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு கிடைத்தது.
இதை அடுத்து இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் அவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் ட்ரிபிள் ஆர் திரைப்படம் போல் கேம் சேஞ்சர் திரைப்படமும் ராம்சரனுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் தற்போது விற்பனையாக இருக்கிறது.
ஷங்கரும் ராம் சரணம் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தை வெளிநாட்டு உரிமத்தை வெறும் 22 கோடிக்கு தான் கேட்டிருக்கிறார்கள். வேறு யாரும் அதிக தொகை கொடுத்து முன்வராததால் இந்த படத்தை வெறும் 22 கோடிக்கு தான் வெளிநாட்டு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது.
இது இயக்குனர் சங்கருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்து இருக்கிறது. தென்னிந்தியாவில் ஒரு பெரிய நட்சத்திரமும் இயக்குனரமும் இணைந்து உருவான படத்தில் கேம் சேஞ்ர் தான் குறைந்த அளவுக்கு வெளிநாட்டில் விற்பனையான திரைப்படமாக கருதப்படுகிறது. இதனால் பல ரசிகர்களும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஷங்கருக்கு இந்த அவமானம் தேவையா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.