நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கடந்த இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. அதன் பின்னர் படக்குழு திரைப்பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்ததாலும் ஷூட்டிங்கில் செல்போன்கள் அனுமதி இல்லை என்பதாலும் படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளியில் தெரியவில்லை.
கடந்த மாதம் மார்ச் 3வது வாரத்தில் இந்தப் படத்தின் டீஸர் ஷூட்டிங் முடிக்கப்பட்டு அடுத்த அறிவிப்பு எப்போது என்பதையும் கூறினர். ஏப்ரல் 15ஆம் தேதி காலை அனைத்து பத்திரிக்கைகளிலும் படத்தின் போஸ்டர் மற்றும் 9:05 மணிக்கு படத்தின் தலைப்பு ‘ கங்குவா ’ என வெளியிடப்பட்டது. இத்துடன் டீஸரும் வந்தது.
படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதாக பலர் உணர்ந்தனர். ஏன் இந்த தலைப்பு ? இதற்கு என்ன அர்த்தம் போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இயக்குனர் சிவா பதில் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “ கங்குவாவில் காங்கு என்றால் நெருப்பு என்று அர்த்தம். கங்குவா என்றால் நெருப்பின் பவர்களைக் கொண்ட மனிதன். அதனால் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு சூப்பர் நெட்சுரல் பவர் எல்லாம் கிடையாது, வெறும் உவமையே. ” என்றார்.
மேலும், “ இது என்னுடைய கற்பனையில் உருவான ஓர் வரலாற்று போர்த் திரைப்படம். காட்சிகள் எல்லாம் 1500 ஆண்டுகளுக்கு முன் நடப்பது போல காட்டப்பட்டிருக்கும். வி.எஃப்.எக்ஸ் பணிகள் படத்தில் மிக அதிகம் அதற்கு சிறப்புக் குழு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது. மக்கள் இந்தப் படத்தை திரையரங்கில் கண்டு ரசிப்பதைக் காண ஆவலாகக் காத்திருக்கிறேன். ” என்றார் இயக்குனர் சிவா.
காங்குவா திரைப்படமாக மொத்தம் 10 மொழிகளில் 3டி – வில் வெளியாகிறது. அடுத்த மாதத்துடன் ஷூட்டிங் பணிகளை முடிக்க படக்குழு மும்முரமாக உள்ளது. அதன் பிறகு நீண்ட போஸ்ட் புரொடக்ஷன் அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைப்பட ரீலீஸ்.