Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஜெயம் ரவி மீது வன்மத்தை கக்கிய இயக்குனர் சூரஜ்

ஜெயம் ரவி மீது வன்மத்தை கக்கிய இயக்குனர் சூரஜ்

மூவேந்தர், குங்குமப்பொட்டு கவுண்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சூரஜ் ஆரம்பத்தில் இயக்குனர் சுந்தர் சி யின் அருணாச்சலம், மேட்டுக்குடி ,உள்ளத்தை அள்ளித்தா போன்று திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி எழுந்தார்.

- Advertisement -

பின்பு இவர் இயக்குனரானதும் இவர் நிறைய நகைச்சுவை திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சில படம் வெற்றி அடைந்திருக்கிறது. ஒரு சில படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அதில் குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து இவர் எடுத்த படிக்காதவன் மற்றும் மாப்பிள்ளை என்ற இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. திரைப்படங்களில் நடிகர் தனுஷின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பெருமையை ஈர்ப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இது ஒருபுறம் இருந்தாலும் இந்தத் திரைப்படங்களின் பெயர்கள் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 80களில் நடித்த திரைப்படங்களில் பெயர்களாகும் .இதன் காரணத்தினாலே அவருடைய மருமகன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்ற எண்ணமே ரசிகர்களிடம் இத்திரைப்படம் வெற்றியடைய ஒரு மேலோகிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்று தனக்கென்று ஒரு தனித்துவமும் தனக்கே உரிய இயற்கையான நடிப்பு திறமையும் நடிகர் தனுஷிற்கு உண்டு. இதன் காரணத்தினாலேயே திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இவ்வாறான திரைப்படங்களை இயக்கி வெற்றியை கண்ட இயக்குனர் சூரஜ் அடுத்த திரைப்படத்திற்கு தனுஷிடம் கதை கூறிய பொழுது நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன். இப்பொழுது வேண்டாம் என்று கூறியதும் காத்திருக்காமல் அடுத்த நடிகனை தேடி சென்றுவிட்டார்.

இயக்குனர் சூரஜ் அது தற்பொழுது பொன்னியின் செல்வனாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தான் அவரை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன் என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஏறத்தாழ தோல்வியடைந்ததென்றே சொல்லலாம்.

இதைப் பற்றி ஒரு பேட்டியில் பேசிய பொழுது இயக்குனர் சூரஜ் காத்திருந்து தனுஷை வைத்தே நான் சகலகலா வல்லவன் என்று திரைப்படத்தையும் இயக்கி இருக்கலாம். ஒருவேளை அப்படி இருந்தால் வெற்றி அடைந்திருக்குமோ என்னவோ என்று அவர் கூறினார்.

இதற்குப் பிறகு தற்போது இவர் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவை வைத்து அவர் எடுத்த நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வந்த சுவரை தெரியாத அளவிற்கு மறைந்து சென்றது.அந்த அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நல்ல இயக்குனர் என்பவர் எந்த நடிகனாக இருந்தாலும் அவரை வைத்து ஒரு நல்ல திரைப்படத்தை இயக்குவது சிறந்ததாகும். இப்படி நடிகர்களின் மீது பழியை தூக்கி போடுவது நியாயமற்றது என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

தற்பொழுது ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து விட்டார். இதற்கு அவர் திறமையை காரணமாகும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இவ்வாறு நான் இயக்குனர் சூரஜ் கூறி இருப்பது நியாயம் இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Most Popular