இயக்குனர் வம்சி பைதபள்ளி தலைமையில் முழுக்க முழுக்க குடும்பப் படமாக உருகாப்பட்ட படம் வாரிசு. தளபதி விஜய் ஹீரோவாக நடித்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிப் படமாக வெளியானது. 8 ஆண்டுகளுக்குப் பின் தன் போட்டியாளரான அஜித்துடன் சென்ற பொங்கலுக்கு மோதினார்.
வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகவும் சுமாரான வார்த்தைகளைப் பெற்றிருந்தாலும் விஜய்யின் மார்கெட்டிற்கு வசூலை ஈட்டியது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு இல்லை. தெலுங்கில் வாரிசு படத்திற்கு வரவேற்பே கிடைக்கவில்லை. குடும்பங்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து இப்படத்தை ஹிட் ஆக்கினர்.
எவடு, மஹரிஷி, தோழா போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய பிறகே வம்சி தளபதி விஜய்யுடன் சேர்ந்தார். இந்த கூட்டணி சரியாக ஜோலிக்காததால் சிக்கலில் இருக்கிறார் இயக்குனர் வம்சி. இவரது பலமே குடும்பத் திரைப்படங்களை சிறப்பாக செய்வதே. வாரிசு படத்தில் தன் பலத்தை காட்டியும் சறுக்கினார்.
மேலும் வாரிசு திரைப்படத்தை கேலி செய்தவர்களை எதிர்த்து நேர்காணல் பலவற்றில் கோபமாக பேசினார். இது அவரது இமேஜை சற்று குறைத்துள்ளது. தற்போது பல இடங்களில் அவர் கதை சொல்லியும் அவருக்கு அடுத்தப் பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். இதற்கு காரணம் வாரிசு படம் என்கின்றனர்.
இது தான் சாக்கு என சிலர் விஜய்யை இதில் சேர்க்கின்விஜய் மெர்சல் படத்தின் மூலம் தேனாண்டால் பிலிம்ஸ் கதையை முடித்து வைத்தது போல இவரது கேரியரை முடித்துள்ளார் விஜய். தளபதி விஜய்யை வைத்து படம் செய்ததால் தான் அவருக்கு இந்த நிலைமை என கலாய்த்து வருகின்றனர். இது வழக்கமாக சமூக வலைதளங்களில் நடக்கும் சண்டை தான்.
டோலிவுட் நட்சத்திரங்கள் பலரிடம் வம்சி கதை கூறியுள்ளார். அவர்களில் ஒருவர் விரைவில் நிச்சயம் இவருக்கு ஓ.கே கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையென்றால் வேறொரு சிறு ஹீரோவுடன் சேர்ந்து தன் திறனை வெளிக்காட்டி மீண்டும் தன் இடத்தை பிடிக்கும் நோக்கில் இருப்பார்.