Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..? இயக்கப் போவது யார்..?

நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..? இயக்கப் போவது யார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படம் ஏறத்தாழ நிறைவு பகுதியை அடைந்து விட்டது .

திரைப்படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23வது திரைப்படத்தை நடிப்பதற்கு தயாராகி விட்டார் என்ற தகவலும் சமீபத்தில் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை ருக்மணி வசந்து  நடிக்க போவதாகவும் இது முற்றிலும் ஒரு காதல் ஆக்சன் கலந்த திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 24 ஆவது திரைப்படத்தை இதற்கு முன்பு தான் நடித்த டான் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற செய்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் யாருமே எதிர்பாராத ஒரு சுவாரஸ்யமான தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது தளபதி விஜய் வைத்து கோட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏறுத்தால உறுதி செய்யப்பட்ட தகவல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி ஃபிலிம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதுவரை சிவகார்த்திகேயனுக்கு தராத அளவிற்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை பயன்படுத்தி இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது கோட் திரைப்பட படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் இசையமைப்பாளர்கள் போன்ற தகவல்களை படக்குழுவினர்கள் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular