சினிமா

விடுதலை வெற்றியைக் கொண்டாட படக்குழுவினரை நேரில் சந்தித்து பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. ! என்ன பரிசு தெரியுமா.. ?

Vetrimaaran gold coin gift for viduthalai

வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலர் நடித்துள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் கதையை எடுத்து சிறப்பான திரைக்கதை மற்றும் வசனங்கள் கூட்டி இரண்டு பாகங்களாக படைத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

கான்ஸ்டேபிள் குமரேசனாக வரும் சூரி நடிப்பில் பிரமாதப் படுத்தியுள்ளார். முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் இவர் நடிப்பாற்றலால் அக்கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாழ்ந்தார். நாயகி பவானிஶ்ரீயும் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார். இருவரின் ஒன்றாக வரும் மற்றும் காதல் காட்சிகள் அழகாக வடிவைகப்பட்டுள்ளது.

Advertisement

அரசுக்கு எதிராக மற்றும் தங்கக் கிராம மக்களுக்காக போராடும் மக்கள் படையின் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியை ட்ரைவர் பிடிப்பதே முதல் பாகம். இடையே நாம் திரையில் காணும் கொடூரக் காட்சிகள் அடுத்த சில நாட்கள் மனதில் அடிக்கடி வந்து போகும்.

விடுதலை முதல் பாகம் நம்மை அவ்வுலகதிற்கே அழைத்துச் செல்கிறது. நிஜத்திற்கு ஒத்துப் போகும் ஓர் படம். வெற்றிமாறன் எப்போதும் இதைக் குறிப்பிடுவார், அதை இப்பத்தில்லும் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதுவரை தான் இயக்கிய 6 படங்களும் மக்களிடையே மாஸ்டர்பீஸ் டேகை பெற்றுள்ளது.

Advertisement

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் மிகப் பெரிய லாபத்தை திரட்டவுள்ளது. விமர்சன ரீதியாக பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றுள்ளது ஆச்சர்யப்பட இல்லை. வெற்றிமாறன் படத்தில் நடித்தவர்களை நேரில் சந்தித்து கோல்ட் காய்ன் வழங்கி படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார். இதே போல் அசுரன் படத்திற்கு பின்பும் அவர் இதை செய்த்தார். அனைவரும் பங்கேற்கும் வெற்றி விழா விரைவில் நடக்கும்.

முதல் பாகம் கதைக்கு வெறும் செட்டப் தான். மிகக் கொடூரமான ஆக்க்ஷன் காட்சிகள், டிவிஸ்ட்கள் மற்றும் போராட்டங்கள் நிறைந்த படம் அடுத்த பாகத்தில் தான். அடுத்த 6 – 7 மாதத்திற்குள் அதையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top