Friday, September 13, 2024
- Advertisement -
Homeசினிமாவட சென்னை 2 & வாடிவாசால் எப்போது.. ? மௌனம் களைத்த இயக்குனர் வெற்றிமாறன்.. !

வட சென்னை 2 & வாடிவாசால் எப்போது.. ? மௌனம் களைத்த இயக்குனர் வெற்றிமாறன்.. !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களாக நடித்துள்ள படம் விடுதலை. இப்படம் 2 பாகங்களாக படமாக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேலாக தயாராகிவரும் இந்த பிராஜெக்ட்டின் முதல் பாகம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

நேற்று மார்ச் 8ஆம் தேதி படத்தின் டிரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் இசையில் மொத்தம் 3 பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை இளையராஜா பாடியும் இருக்கிறார். பாடல்களுடன் வெளியாகிய டிரெய்லர் தரம். முதல் முறையாக ஹீரோவாக வரும் சூரியின் நடிப்பு டிரெய்லரிலேயே நம்மை ஈர்க்கிறது.

முதல் பாகத்தில் விஜய் சேதுபதியின் திரை இருப்பு குறைவே, முழுக்க முழுக்க சூரியைச் சுற்றிய படமே. பிரிவினைவாதியாக ‘ வாத்தியார் ’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தன் கிராம் பெண்களை அச்சுறுத்தும் போலீஸ்க்கு எதிராக செயல்படுவதும் அதனால் ‘ ஆபரேஷன் கோஸ்ட்ஹன்ட்’ கீழ் அவரை கைதுசெய்தே கதை. இந்த ஆபரேஷனில் கான்ஸ்டேபில் குமரேசனாக வரும் சூரி இணைந்து அவரின் திறனை வெளிப்படுத்துவதே கதை.

- Advertisement -

இத்திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது, ஆனல இன்னும் அதிகாரபூர்வமான ரீலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை. மார்ச் 30ஆம் தேதி சிம்புவின் பத்து தல அடுத்த நாள் விடுதலை என அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள் எனக் கூறுகின்றனர். வெற்றிமாறனின் ரசிகர்களின் ஏக்கம் இதை விட அதிகம் ! எப்போது வடசென்னை 2 ? இப்பெரிய பெரிய கேள்விக்கு பல வருடங்களாக யாரும் பதிலலிக்கவில்லை.

- Advertisement -

வடசென்னை 2 எப்போது ?

அண்மையில் வாத்தி படத்தின் விழாவில் தனுஷிடம் இக்கேள்வியை எழுப்பியதற்கு “ இன்னும் பலமாக கத்துங்கள். சத்தம் வெற்றிமாறனின் ஆபிஸ்க்கு கேட்க வேண்டும். ” என நகைச்சுவையாக கூறி, “ நிச்சயம் வரும். ஆனால் எப்போது எனத் தெரியவில்லை. ” எனக் குறிப்பிட்டார்.

இணையதளம் முழுவதும் வடசென்னை 2 மீம்ஸ்கள் தான். நேற்று விடுதலை படத்தின் விழாவில் வெற்றிமாறன் இறுதியாக பதிலத்துவிட்டார். அவர் கூறியதாவது, “ இந்த ஆண்டு விடுதலை 1&2 அதன் பின்னர் வாடிவாசல் ஆரம்பிக்கிறேன். அதன் பின்னரே வடசென்னை 2 வரும். ”

வடசென்னை 2 படத்தைப் போலவே வாடிவாசலும் 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஒரு வீடியோ காட்சி வெளியானது, ஆனால் இன்னும் ஷூட்டிங் துவங்காததால் சூர்யா அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார். வாடிவாசல் திரைப்படம் உருவாகி வெளியாக எப்படியும் 2 ஆண்டுகள் ஆகிவிடும். அதன் பின்னர் வடசென்னை இரண்டாம் பாகதுக்கு 2 ஆண்டுகள். கணக்கு செய்து பார்த்தால் 2026 அல்லது 2028 ஆண்டு வெளியாகும் போல.

Most Popular