Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாஹெச்.வினோத்தை கைவிட்ட கமல்ஹாசன்.. தீரன் 2 பாகத்திலும் சிக்கல்.. கைகொடுப்பார கார்த்தி.. !

ஹெச்.வினோத்தை கைவிட்ட கமல்ஹாசன்.. தீரன் 2 பாகத்திலும் சிக்கல்.. கைகொடுப்பார கார்த்தி.. !

இயக்குனர் ஹெச்.வினோத் நல்ல கன்டென்ட் படங்களை வழங்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். சதுரங்க வேட்டை, தீரன் என இரு படங்களின் மூலம் அஜித்துடன் இணைந்தார். நேர்க்கொண்ட பார்வை எனும் படத்தை அவ்வளவு அழகாக இயக்கினார். ரீமேக் என்றாலும் வசனங்கள் ஆழ்மனதில் பதியுமாறு எழுதினார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வலிமை படத்திற்கு எதிர்பார்ப்புகள் இமயமலை அளவு உயர்ந்தது. கொரோனா காலகட்டத்தில் கதைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு சுமாரான படமாக முடிக்கப்பட்டது. அதனை ஈடுகட்டும் வகையில் இந்த ஆண்டு துணிவு படத்தை மக்கள் கொண்டாடும் விதமாக அளித்தார்.

அதோடு உலகநாயகன் கமல்ஹாசனுடன் அரசியல் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகிணார். படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் மூலம் வெளியானது. முழுக்க முழுக்க சமரசம் இல்லாமல் ஹெச்.வினோத் இயக்கும் படங்கள் தரமானதாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கமல்ஹாசன் அவர்களுடன் என்பதால் சிறப்பான சினிமாவை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

அந்தப் படத்தின் அடுத்த அறிவிப்பு கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணிரத்னம் முந்திக் கொண்டார். கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் அவர்களின் படத்தில் கவனம் செலுத்துவதால் வினோத்துடன் செய்ய வேண்டியதாக இருக்கும் படம் தள்ளிப் போகிறது.

- Advertisement -

எப்படியும் இன்னும் இரண்டு வருடம் ஆகிவிடும் என்பதால் நேரத்தை வீணாக்காமல் இயக்குனர் வினோத் தீரன் இரண்டாம் பாகத்தின் பணியில் இறங்கியுள்ளார். பவேரியா குழுவைப் பிடிப்பதை மையமாகக் கொண்டது முதல் பாகம். அதே வழியில் பார்ட் 2 கதையை செய்து வருகிறார் வினோத்.

இருப்பினும் ஷூட்டிங் எப்போது என இன்னும் தெரியவில்லை. கார்த்தி அடுத்து நலன் குமாரசாமியுடனும் பிரேம் குமாருடனும் படம் செய்யவுள்ளார். அது நிறைவு பெற்ற பிறகு கைதி 2 படத்தை கையில் எடுப்பாரா அல்லது தீரன் 2ஆம் பாகத்தில் நடிப்பாரா எனத் தெரியவில்லை.

Most Popular