Friday, July 18, 2025
- Advertisement -
Homeசினிமாநடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு நிலையா? நினைத்தாலே கண்ணீர் வரும்!

நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு நிலையா? நினைத்தாலே கண்ணீர் வரும்!

எண்பதுகளில் வெளிவரும் திரைப்படங்களில் தற்பொழுது வரும் திரைப்படங்களைப் போன்று கதாநாயகிகள் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடியும் நடிப்பது குறைவாக இருக்கும்.அதற்கு பதிலாக கவர்ச்சியாக நடிப்பதற்கு என்றே ஒரு கதாபாத்திரத்தை அந்த திரைப்படங்களில் நடிக்க வைத்திருப்பார்கள். அது சில்க் ஸ்மிதா, பல்லவி, அனுராதா ,டிஸ்கோ சாந்தி என்று சில நடிகைகள் இருந்தார்கள்.

- Advertisement -

முதல் இடத்தில் இருப்பது நடிகை சில்க் ஸ்மிதா தான். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது நடிகை டிஸ்கோ சாந்தியாகும். பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகை ஆக நடிகை டிஸ்கோ சாந்தி நடித்திருக்கிறார்.

- Advertisement -

1983ஆம் ஆண்டு வசந்தமே வருக என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி. ஆனால் இவர் பிரபலமானது நடிகர் மோகன் மற்றும் ரேவதி நடித்த உதயகீதம் திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்ல இவருக்கு பல மொழியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி பிரபலமான டிஸ்கோ சாந்தி பல நாட்களாக இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தார். தற்பொழுது ஒரு பேட்டியில் இவர் தன்னுடைய சொந்த வாழ்வை பற்றி நிகழ்வுகளை பகிர்ந்து இருந்தார் .அது என்னவென்று பார்ப்போம்.

இவர் நடிகர் சி எல் ஆனந்த் என்பவரின் மகள் ஆவார். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியான லலித குமாரியின் சகோதரி ஆவார். இவர் 1996 இல் ஸ்ரீ ஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பான பெண்ணாக வாழ்ந்து வந்தார். இவருக்கு அக்ஷரா, ஸ்ரீ ஹரி என்ற மூன்று குழந்தைகள் இருந்தது. சோகம் என்னவென்றால் இவருக்கு பிறந்த பெண் குழந்தையான அப்சரா ஸ்ரீஹரி நான்கு மாத குழந்தையாக இருக்கும் பொழுதே இறந்து விட்டாராம் .

தன்னுடைய கணவன் டிஸ்கோ சாந்தியின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தாராம். அவர் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் உணவு உட்கொள்வார்களாம் .அந்த அளவிற்கு ஒருவரை ஒருவர் நேசித்து வந்திருக்கிறார்கள். இப்படி தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த டிஸ்கோ சாந்தியின் வாழ்வில் மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்தது.

தன்னுடைய கணவருக்கு திடீரென்று மாரடைப்பு வந்தது அவருடைய காது, மூக்கு, வாய் என்று எல்லா புறமும் ரத்தமாக வலிந்து அவர் உயிர் பிரிந்ததை கண்ணால் பார்த்து இன்றுவரை மறக்க முடியாமல் தவிக்கிறேன் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

என் கணவருடைய நினைவு தான் நான் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று தன்னுடைய சோகக் கதையை யூடியூப் பெட்டியில் குறிப்பிட்டிருந்தார். நடிகை டிஸ்கோ சாந்தி நடிக்கும் காலத்தில் கவர்ச்சியாக நடித்த நடிகையாக மட்டுமே பிறர் முன் காட்சியளித்த இவர் தற்பொழுது கொடுத்திருக்கும் பேட்டியினால் இவர் மீது ஒரு நல்ல மரியாதையை ஏற்பட்டிருக்கிறது.

Most Popular