Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்.. ! இந்திய சினிமாவில் சாதனை.. !

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்.. ! இந்திய சினிமாவில் சாதனை.. !

ஜீத்து ஜோசப்பின் கதை, திரைக்கதை, இயக்கம் என மொத்தமாக அவரது கைவண்ணத்தில் 2013ஆம் ஆண்டு உருவான மலையாள திரைப்படம் த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடிப்பில் இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆனது.

- Advertisement -

தமிழில் கமல்ஹாசன், கெளதமி ஜொலிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஹிந்தியில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் இந்திய மொழிகள் அல்லமால் சின்ஹாலா, சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக என்ற பெருமையை பெற்றுள்ளது தத்ரிஷ்யம். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2021 லாக்டவுனில் வந்தது. முதல் படத்தைப் போலவே இதற்கும் அபார வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

ஹாலிவுட்டில் ரீமேக்

- Advertisement -

பிரபலமான ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்கள் இந்தியாவில் ரீமேக் ஆவது பொதுவான ஒன்று தான். அதிலும் பல கொரியன் படங்களின் கதைகரு இந்திய சினிமாவில் காணப்படுகிறது. ஆனால் இந்திய படங்கள் அங்கே ரீமேக் ஆவது அரிதான ஒன்று தான். த்ரிஷ்யம் படககுழுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இரண்டு பாகங்களையும் படமாக்குகின்றனர்.

வெளிநாட்டு ரீமேக் உரிமத்தை பனோரமா நிறுவனம் பெற்றுள்ளது. ஹாலிவுட் மற்றும் கொரியாவில் தயாராகும் படத்தில் யார் நடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. தற்போது அந்தக் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.

Most Popular