சினிமா

சீதா ராமம் வசூல் எவ்வளவு தெரியுமா? கேக் வெட்டி கொண்டாடிய துல்கர் சல்மான்

சீதா ராமம் திரைப்படம் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த காதல் கதை அமைந்திருக்கிறது என்று ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் 1964 நடப்பது போன்ற கதைக்களத்தை கொண்டது போல் காட்சிகள் எடுக்கப்பட்டது.இதேபோல் தமிழில் ஓகே கண்மணி என்ற திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளியான ஓகே கண்மணி என்ற திரைப்படத்தில் நடித்த துல்கர் சல்மான் தான் சீதா ராமம்திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Advertisement

பொதுவாகவே துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படங்கள் இளம் ரசிகர்களை ஈர்ப்பதில் வெகு சிறப்பாக அமைந்திருக்கும். அதனால்தான் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு காதல் மன்னன் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்தது. தற்பொழுது துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக மிர்நாள் தாகூர் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நிறைய படங்களை நடித்து இருக்கிறார்.

ஆனால் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் சீதா ராமம் திரைப்படமாகும். ஆனால் இவர் நடித்த ஹிந்தி சீரியலை தமிழில் இனிய இரு மலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அதில் இவர் அம்மு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஏற்கனவே நிறைய ரசிகர்களை கொண்டவர். சின்னத்திரை நடிப்பில் இவர் கொண்ட ரசிகர்களால் இந்த சீதாராமன் திரைப்படத்திலும் இவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Advertisement

மேலும் இந்த படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் ராஷ்மிகா மந்தானா சீதா ராமம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான சீதா ராமம் திரைப்படம் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இது தெலுங்கில் துல்கர் சல்மானுக்கு மிகப் பெரிய வசூலாகும்.

இதைத் தொடர்ந்து இந்த வெற்றியை படக்குழுவினரும் இந்த படத்தின் கதாநாயகன் கதாநாயகி ஆகிய துல்கர் சல்மான் மற்றும் மிர்நாள்தாகூர் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள் சீதா ராமம் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்களும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top