தமிழ் திரையுலையில் குறிப்பிடத்தக்க நடிகர்களாக வலம் வருபவர்கள், தற்போது இலவட்ட ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ, என்ன தேவை என்பது அறிந்து நடித்து வருபவர்களில் இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள். வரும் நாட்களில் இவர்கள் மூவரும் அடுத்த படங்களில் ஒரே நேரத்தில் போதிக் கொள்ள இருப்பதால் அந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலே அதிகமாக காணப்பட்டது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த ராக்கி திரைப்படம் அனைவரிடத்தும் வரவேற்பு பெற்றது.மேலும் இந்த திரைப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக நடிகர் தனுஷ் முற்றிலும் புதிதான நடித்துள்ளதால் இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு படத்தின் ஆரம்ப அறிவிக்கப்பட்டிருந்த ஒன்று.
நடிகர் கார்த்திக் சிவகுமாரை எடுத்துக் கொண்டால் அவர் நடிப்பில் தீபாவளி என்று வெளியாக காத்திருக்கும் படம் ஜப்பான் திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி உள்ளார். இயக்குனர் ராஜூமுருகன் கடைசியாக இயக்கிய சிப்ஸி திரைப்படமும், அதற்கு முன்னதாக இருக்கிறது ஜோக்கர் திரைப்படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வித்யாசமாக நடித்திருப்பதால் இந்த படமும் அவரது ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்டால் அவர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் அயலான். இந்த படத்தை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அதிகபட்சமான கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய ரோலில் ஏலியன் ஒன்று நடத்துள்ளதாகவும் அது படத்தின் முழுவதும் வரும் எனவும் படக்குழு இந்த நிலையில் இன்று ஆயிரம் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்ற ஒரு அறிவிப்பு வெளிவந்தது.
இதனால் இவர்கள் மூவரும் வருகின்ற தீபாவளிக்கு நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி விருந்தாக அமையும் என்பதிலிருந்து மாற்று கருத்தும் இல்லை. மில்லரிடம் சிக்காமல் ஜப்பானுக்கும் போகாமல் அயலான் வெற்றி பெறுமா? அல்லது இருவரும் மில்லரிடம் தோற்றுப் போவார்களா? அல்லது இருவரையும் ஜப்பான் தூக்கி சாப்பிடுமா என்ற பொறுத்திருந்து? பார்ப்போம்.