மாமன்னன் திரைப்படத்தில் தொடர்ந்து நடிகர் வடிவேலு மற்றும் பக்கத்பாஸில் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். எதிரியாக இருவரும் மாமன்னன் திரைப்படத்தில் வேற லெவலில் நடித்து வெற்றி பெற்றார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருந்தார். அரசியல் படமாக வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இந்த காம்போ ஒன்று சேர்ந்திருக்கிறது. இந்த புதிய திரைப்படம் முற்றிலும் சாலை பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறது.
அதாவது தொடரி ,பையா போன்ற திரைப்படங்களில் திரைப்படம் முழுதும் கதாநாயகன் கதாநாயகி போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் பயணித்துக் கொண்டே இருப்பார்கள் கதையும் அப்படியே ஓடும்.
அது போல் இந்த திரைப்படமும் சாலையில் பயணிப்பதிலேயே கதையை ஓட்டிவிடுவார்கள் என்று இதிலிருந்து தெரிய வருகிறது ஆனால் ,முழுமையான விவரம் திரைப்படம் வெளிவந்த பிறகு தான் தெரியும்.
இதில் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை வயதானவராக வடிவிலும், இளமையானவராக பகத் பாசிலும் இணைந்து பயணிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் நகைச்சுவையாக தொடங்கி திரளராக மாறும் என்றும் இது சமூக பிரச்சனையைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு மனைவியாக சித்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் படையப்பா ,நட்புக்காக ,முகவரி போன்ற திரைப்படங்களில் தங்கை, மகள் ,அண்ணி என்று துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் யார் போன்ற தகவல்கள் அண்மையில் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.