தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமன்னன் திரைப்படம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நெட்ஃப்லிக்ஸ் ரிலீசானது. இந்த படம் திரையரங்குகளில் 50 கோடி ரூபாய் வசூலுக்கு மேல் தமிழ்நாட்டில் படைத்தது.
இதில் அடித்தட்டு மக்களை சமூக நீதிப் பேசும் அரசியல் கட்சிகள் எவ்வாறு நடத்துகிறது என்பதை இந்தப் படம் பேசுகிறது. இதில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் உட்கார இருக்கை கூட கொடுக்காமல் வஞ்சிக்கப்படுகிறார் என்று இந்த படம் பேசியது.
இந்த நிலையில் ஓ டி டி இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நடந்தது என்னவோ மாரி செல்வராஜ் எதற்கு எடுத்தாரோ அதற்கு எதிர்மறையான தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தி விட்டது.
இதற்கு காரணம் பகத் பாஸில் தான். பகத் பாஸில் அசுரத்தனமான நடிப்பை இந்த படத்தில் காட்டி இருந்தார். மேலும் ஆண்டைகளின் உடலமைப்பை தன்னுடைய நடிப்பில் அபாரமாக வெளிக்காட்டிருந்தார். இதனால் அவர் செய்த அட்டூழியங்கள் ஜாதி பாகுபாடுகள் அனைத்தையும் ரசிகர்கள் மறந்து விட்டு அவரை ஹீரோ போல் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
மேலும் அவர் செய்த அட்டூழிய காட்சிகளை எல்லாம் எடிட் செய்து கெத்தான பாடல்களை போட்டு ஸ்டோரி வைக்க தொடங்கி விட்டார்கள்.மேலும் சிலர் பகத் பாஸில் போலவே நடக்க தொடங்கி விட்டார்கள்.
ஃபகத் பாஸில் அந்த படத்தில் வில்லன் என்பதையே மறந்துவிட்டு அவர் செய்ததெல்லாம் ஹீரோ போல் பார்க்க தொடங்கி விட்டார்கள். இதனை கொஞ்சமும் மாறி செல்வராஜ் எதிர்பார்த்து இருக்க மாட்டார் என ரசிகர்கள் கிண்டல் அடிக்க தொடங்கிவிட்டனர்.
மேலும் இதை தான் தேவர் மகன் திரைப்படத்திற்கும் நடந்ததாகவும் அதனை மாரி செல்வராஜ் குற்றஞ்சாட்டிய நிலையில் தற்போது அவருடைய படத்தில் வர வில்லனையும் இந்த மக்கள் ஹீரோவாக பார்க்க தொடங்கி விட்டார்கள் என்று திரைப்படம் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.