Friday, July 11, 2025
- Advertisement -
Homeசினிமா"7 டைம்ஸ்" தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் மரணம்

“7 டைம்ஸ்” தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் மரணம்

பிரபல நடிகர் கசான் கான் நேற்று முன்தினம் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் 1992 ஆம் ஆண்டு பிரபு நடித்த செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

- Advertisement -

தமிழ்,மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழிலேயே இவர் மேட்டுக்குடி,முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா,கட்டுமரக்காரன் போன்ற திரைப்படங்களில் எல்லாம் வில்லனாக நடித்திருக்கிறார்.

அதிலும் இவர் தளபதி விஜயும் சிம்ரனும் இணைந்து நடித்த பிரியமானவளே திரைப்படத்தில் மிகப் பிரபலமானவர். அதில் இவர் கூறும் 7 டைம்ஸ் என்ற வசனம் ரசிகர்களிடம் பெரும் அளவில் பேசப்பட்டது. இது போன்று இவர் பல திரைப்படங்களில் நடித்து பெயரை பெற்றவர்.

- Advertisement -

யார் வேண்டுமானாலும் கதாநாயகனாக நடித்து விடலாம். ஆனால் நெகட்டிவ் ரோல் என்று சொல்லப்படும் வில்லனான நடிப்பது மிக கடினமானது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு நிஜ வாழ்விலும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ரசிகர்கள் அவர்களைப் பார்த்தால் கூட அவர்களை நிஜமான வில்லன் என்று நினைத்து தித்தி சபிப்பார்கள்.அதையெல்லாம் எதிர்கொண்டும் வில்லனாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல.

- Advertisement -

அந்த துறையிலும் சாதித்தவர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் நிச்சயம் இடம்பெற வேண்டும்.ஏனெனில் தமிழ்,மலையாளம்,கன்னடம் என்ற மொழிகள் ஏறத்தாழ 61 திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.நடிகர் கசான்கான் இப்படிப்பட்ட அவருடைய மரணம் தமிழ் சினிமாவிற்கு ஒரு பெரும் துயரம் ஆகும்

இப்படிப்பட்ட அவருடைய மரணத்தை ஏன் தமிழகம் கண்டு கொள்ளவில்லை என்று தெரியவில்லை. எத்தனையோ தேவை இல்லாத செய்திகளை தோண்டி எடுத்து பிரபலப்படுத்தி வரும் இது எந்த ஊடகமும் இந்த செய்தியை கண்டுகொள்ளவில்லை. 1992 தொடங்கி 2015 வரை சினிமாவையே வாழ்க்கையாக கொண்டிருந்த ஒரு பிரபலத்தின் மரணத்தை ஏன் இப்படி மறந்தார்கள் என்று தெரியவில்லை.

அதேபோல் இவரோடு நடித்த சக நடிகர்களும் அதைப்பற்றி எந்த ஒரு வார்த்தையும் இதுவரை எந்த இணையத்திலும் பதிவிடவில்லை.இவர் மறைவை விட இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

Most Popular