Thursday, November 28, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா.. நீங்க நல்லவரா? கெட்டவரா? விடை தெரியாமல் நிற்கும் ரசிகர்கள்

சூர்யா.. நீங்க நல்லவரா? கெட்டவரா? விடை தெரியாமல் நிற்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல உதவிகளை செய்து பல பட்டதாரிகளை உருவாக்கி சாதித்து காட்டியவர் என்றால் அது நடிகர் சூர்யா தான். தனது அகரம் அமைப்பு மூலம் பல குழந்தைகளின் வாழ்க்கையை நடிகர் சூர்யா மாற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதிலும் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் முதல் ஆளாக உதவி செய்வது , அவருடைய தம்பி விவசாயத்திற்காக குரல் கொடுப்பது என்று குடும்பமே சேவைக்கு பஞ்சமே இல்லாமல் செய்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதம் சூர்யாவின் ஒட்டுமொத்த இமேஜையும் நொறுக்கி க்ளோஸ் செய்து விட்டது பருத்திவீரன் விவகாரம்.

இதற்கு முழு காரணமாக தயாரிப்பாளரும் சூர்யாவின் குடும்ப உறுப்பினருமான ஞானவேல் ராஜா தான் இருக்கிறார். எப்போதுமே தங்களுடைய குருவை எந்த ஒரு மாணவரும் மறக்க மாட்டார். ஆனால் பருத்திவீரன் எடுத்த இயக்குனர் அமீரை கார்த்தியும் அவருடைய குடும்பமும் சுத்தமாக கை கழுவி விட்டது.

- Advertisement -

அதற்கு காரணமாக ஞானவேல் ராஜா இருப்பதாக கூறப்படுகிறது. பருத்திவீரன் படத்தில் இயக்குனர் அமீரை கையாண்ட விதம் சூர்யா குடும்பத்தின் மீது கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. படத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு இனி இது உங்கள் படம் என்று சொல்லி சென்ற சூர்யா பிறகு படம் நன்றாக வந்துவிட்டது என தெரிந்த உடன் தன்னுடைய பணத்தை கொடுத்து ஞானவேல் ராஜாவை பினாமி போல் பயன்படுத்தி அமீரிடமிருந்து படத்தை மீண்டும் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதற்கு உரிய பணத்தை இயக்குனர் அமீருக்கு இதுவரை சூர்யா தரவில்லை. மேலும் சூர்யா பெயரை பயன்படுத்தி ஞானவேல் ராஜா செய்த அட்டகாசத்திற்கும் சூர்யா தடை போடவில்லை. இப்போது ஒவ்வொரு நேர்காணலுக்கு பிறகும் அனைத்து நியாயமும் அமீர் பக்கம்தான் இருக்கிறது.

இது குறித்து சூர்யா குடும்பம் வருத்தமோ மணிப்போ தெரிவிக்காதது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இவ்வளவு நல்லது செய்தாலும் கடைசியில் ஞானவேல் ராஜாவை ஒரு பினாமி போல் பயன்படுத்தி சூரியா குடும்பம் தமிழ் திரையுலகில் லாபத்தை பார்த்து இருக்கிறது.

மேலும் அமீருக்கு சேர வேண்டிய நியாயத்தையும் பணத்தையும் சூர்யா குடும்பம் இதுவரை தரவில்லை. குறைந்தபட்சம் இதற்கு ஒரு விளக்கம் கூட சூர்யா குடும்பம் தர தயாராகவில்லை. அந்த அளவுக்கு அகங்காரத்துடன் நடிகர் சூர்யா குடும்பம் இருப்பதால் உண்மையிலேயே நீங்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா இன்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

Most Popular