கன்னட திரைப்படஇயக்குனர் ரிஷப் செட்டி இயக்கத்தில் காந்தாரா என்று திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இயக்குனர் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த காந்தரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில நாட்களிலேயே எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வரவேற்பை பெற்றதோடு 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை பெற்றது.
இதன் மூலம் கேஜிஎப் , சார்லி திரைப்படங்களைத் தொடர்ந்து கர்நாடக சினிமாவில் அடையாளமாக காந்தரா விளங்கியது.
.
இந்த காந்தாரா திரைப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் என்ற கன்னட இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இப்படி பல வெற்றிகளை பெற்று வந்திருக்கும் இந்த காந்தாரா திரைப்படத்தின் வராக ரூபம் என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காந்தாரா படத்தின் உயிர்நாடியாக இந்த பாடல் விளங்கியது. இதனை பார்ப்பதற்காகத்தான் மக்கள் தியேட்டரில் கூட்டம் கூட்டமாக சென்றனர்.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவினர்களான தாய்குடம் பிரிட்ஜ் என்பவர்களுடைய இயக்கத்தில் உருவான நவரசம் என்ற பாடலின் காப்பி போல் வராகரூபம் பாடல் அமைந்திருப்பதாக வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி காந்தாரா திரைப்படத்தை திரையரங்குகளிலும் ஓ டி டி களிலும் வெளியிட இடைக்கால தடை உத்தரவு விதித்திருந்தது. தற்பொழுது அந்த இடைக்கால தடைகளை நீக்கி நீதிமன்றத்தின் உத்தரவின்படி திரையரங்குகளிலும் ott டீகளிலும் காந்தாரா திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வராக ரூபம் என்ற பாடலை நீக்கி வெளியிட அனுமதித்தது.
அதன் அடிப்படையில் அமேசான் வீடியோவில் காந்தாரா திரைப்படத்தை வராக ரூபம் என்ற பாடலை நீக்கியபின் வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முக்கியமான அம்சமான வராக ரூபம் பாடல் இடம்பெறாதது ரசிகர்களிலேயே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. வராக ரூபம் பாடல் இல்லாமல் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு பார்க்காமலே இருந்து விடலாம் என்றும் பலரும் குற்றம் சாட்டி இருக்கின்றனர். இதனால் ஓட்டிட்டியில் இந்த படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.