Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியை என்ன டா பண்ணி வச்சி இருக்கீங்க.. ஐஸ்வர்யாவை பொளக்கும் ரசிகர்கள்

ரஜினியை என்ன டா பண்ணி வச்சி இருக்கீங்க.. ஐஸ்வர்யாவை பொளக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்.  இந்த படத்தை அவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பாதி முடிவடைந்த நிலையில் ரஜினியை வைத்து முக்கிய காட்சிகளை எடுக்க பட குழு மும்பைக்கு சென்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் ரஜினி லுக் என்ன ரஜினியின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது போஸ்டர் மூலம் பட குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் பாட்ஷாவுக்கு பிறகு முதல் முறையாக இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடிக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் மிகவும் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் இது போன்ற ஒரு கேவலமான ஃபர்ஸ்ட் லுக்கை தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் கூறியுள்ளனர்.

- Advertisement -

மேலும் ரஜினியின் முகத்தை போட்டோஷாப் செய்து ஒட்டியது போல் இருப்பதாகவும் அதையும் சரியாக செய்யவில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். சாதாரண ஆப்பை வைத்து சிறு குழந்தைகள் கூட இதைவிட சிறப்பாக செய்வார்கள் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையை அவமானப்படுத்தும் வகையில் இந்த போஸ்டரை வெளியிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சில ரஜினி ரசிகர்களை இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இது போன்ற போஸ்டரை வெளியிட்டு மற்றவர்கள் கிண்டல் செய்யும் நிலைமைக்கு எங்களை தள்ளாதீர்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தொப்பி வாப்பா பிரியாணி கடையில் இருக்கும் லோகோ போல் இருப்பதாக சாடி இருக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனத்தில் இப்படி மோசமாக போட்டோஷாப் செய்யும் நபர்களை ஏன் வைத்திருக்கிறீர்கள்? அவர்களை உடனே வேலையை விட்டு அனுப்புங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை ஒரு போஸ்டர் என்று வெளியிட உங்களுக்கு எப்படி மனம் வந்தது என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Most Popular