சினிமா

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்.. பாட்டு எப்படி இருக்கு.. இசை அமைப்பாளர் தமன் ஓபன் டாக்

Thaman with vijay

தமிழ் சினிமாவில் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றாலும் விமர்சன ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்தது. பீஸ்ட் பட காட்சி ஒன்று உலக அளவில் ரசிகர்களால் கேலி செய்யப்பட்டது. இந்த நிலையில் தளபதி விஜய் தனது அடுத்த படமான வாரிசில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்துள்ள விஜய் இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீஸ் செய்ய உள்ளார். தெலுங்கு மார்க்கெட்டை பிடிப்பதற்காக விஜய் வம்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா ஜோடியாக விஜய்க்கு நடிக்கிறார். பிரபு, சரத்குமார் ,பிரகாஷ்ராஜ் ,ஷியாம் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உள்ளது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக தமன் பணியாற்றி வருகிறார். பாய்ஸ் படத்தில் தமிழ் சினிமாவில் நடிகனாக அறிமுகமான தமன் தற்போது தெலுங்கு திரையுலகில் இசை அமைப்பாளராக கொடி கட்டி பறக்கிறார். தற்போது கூட அவரது பாடல் ஒன்று தேசிய விருதை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமன் அளித்த பேட்டி ஒன்று விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு திரைப்படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இருப்பதாகவும் , ஆறு பாடலும் அனைத்து எமோஷன்களில் கலந்து இருக்கும் என்று கூறியுள்ளார். தாமும், இயக்குனர் வம்சியும் மற்றும் பாடல் ஆசிரியர் விவேக்கும் மூன்று பேரும் தளபதி விஜயின் தீவிர ரசிகர்கள் என்பதால் ரசித்து ஒவ்வொன்றையும் செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதனால் நிச்சயமாக பாடல்கள் மோசமாக இருக்காது. ரசிகர்களை திருப்தி படுத்தும் அளவுக்கு பாடல்கள் அமையும். திரையரங்குகளில் நிச்சயம் ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள். பாடல்களில் பணியாற்றும்போது ஏதாவது ஒன்று சிறப்பாக அமைந்தால் வம்சியும் பாடலாசிரியர் விவேக்கும் வரவேற்று ரசிப்பார்கள். இதனால் நல்ல உத்வேகத்துடன் வாரிசு படத்தில் பணியாற்றி வருகிறேன். நிச்சயம் படம் மக்களுக்கு பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமன் ஏற்கனவே ஈஸ்வரன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். விஜயின் தீவிர ரசிகரான தமன் மூன்று ஆண்டுகளாக விஜய்யுடன் பணியாற்ற காத்திருந்த நிலையில் தற்போது தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top