சினிமா

அடேங்கப்பா ஒரு மாதத்திலேயேவா.. ? இந்திய சினிமாவில் வரலாற்று சாதனை படைத்துள்ள ஃபர்சி.. !

Farzi

இயக்குனர்கள் ராஜ் – டி.கே கூட்டணியில் உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் ‘ ஃபர்சி ’ ஹிந்தியில் எடுக்கப்பட்டு 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு பேன் இந்தியா ரிலீசாக வந்தது. ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கன்னா ஆகிய மூவரும் லீட் ரோலாலில் நடித்தனர். ஃபர்சி என்றால் நகல் என்று அர்த்தம். பணத்தை அச்சடிக்கும் ஷாஹித் கபூர் கூட்டணியை விஜய் சேதுபதி & கோ பிடிப்பதே கதை.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அமேசான் தளத்தில் இத்தொடர் வெளியாகியது. சீசன் 1 துவக்கம் முதலே பரபரப்பாக சென்றது. இறுதியில் ஷாஹித் கபூரை அவரது முதலாளி ஏமாற்றுவது பின்னர் பதிலுக்கு அவர் பணத்தை எரிப்பது என அப்பரபரப்பு கிளைமாக்சில் உச்சத்தை அடைந்தது. பார்வையாளர்கள் மிகவும் நல்ல விமர்சனங்களை பகிர்ந்து தொடருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.

Advertisement

தற்போது இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட தொடர் என்ற சாதனையை ‘ ஃபர்சி ’ பெற்றுள்ளது. இதுவரை 37.1 மில்லியன் பார்வைகள் பதிவாகியுள்ளது என அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் இருவரும், ஷாஹித் கபூரும் இவ்வளவு பெரிய வரவேற்புக்கு தங்களது நன்றிகளை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

தொடரின் நாயகன் ஷாஹித் கபூர், “ ஃபர்சி ஃபீவர். அனைவரது அன்புக்குக்கும் மிகவும் நன்றி ” என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளியான ஒன்றரை மாதத்திலேயே இப்பெருமையை பெற்று அசத்தியுள்ளது படக்குழுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. கடந்த 4 வாரங்களாக அமேசான் லிஸ்ட்டில் டாப் 10ல் தொடர்ந்து இடம்பிடித்த இத்தொடர் இன்று இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

Advertisement

கொரோனா லாக்டவுனில் பெரும்பான்மையான பார்வையாளர்கள் படங்களில் இருந்து தொடர்களுக்கு தாவினர். இந்திய சினிமாவிலும் அடுத்தடுத்து பல தொடர்கள் உருவாக்கப்பட்டது வெற்றியை ருசித்தது. ஃபர்சி முதலிடம் வகிக்க அடுத்து பஞ்சாயத் போன்ற தொடரக் இடம்பெற்றிருக்கும் (அமேசானில்). முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ரசிகர்கள் எப்போது இரண்டாவது சீசன் என அதே உற்சாகத்தில் காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு அதை எதிர்பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top