Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாபொத்திட்டு போகவும் ……. இன்னும் என்னென்னலாம் கேப்பிங்களோ ………….. ரசிகரின் கேள்விக்கு சூடாக பதிலடி கொடுத்த...

பொத்திட்டு போகவும் ……. இன்னும் என்னென்னலாம் கேப்பிங்களோ ………….. ரசிகரின் கேள்விக்கு சூடாக பதிலடி கொடுத்த பாத்திமா பாபு !

சின்னத்திரை நேயர்களுக்கு பாத்திமா பாபு இந்த பெயர் என்றுமே மறக்காத ஒன்று . செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் இவர் . அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்புடன் இவரது செய்திகளை கேட்பதற்கென்றே 90 காலகட்டங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது . தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான கல்கி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் . தற்போது பல சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் .

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி என்ற வெற்றி பெற்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தூர்தர்சனுக்கு பிறகு ஜெயா டிவியிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் . இப்போது மறைந்த முன்னாள் முதல்வர் இவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளராக நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இவர் பாபு என்பவரை திருமணம் செய்து இருக்கிறார் இந்த தம்பதிகளுக்கு ஆஷிக் மற்றும் ஷார்க் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . சின்னத்திரைகளில் தொடர்ந்து நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான ஒன்று . கலந்து கொண்ட சிறிது நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்தும் இவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாத்திமா பாபு அவ்வப்போது தனது சூட்டிங் மற்றும் குடும்பம் சம்பந்தமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருபவர் . இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவருடன் சமூக வலைதளத்தில் மோதலில் ஈடுபட்டு இருக்கிறார் . அவருக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் பாத்திமா பாபு . மேலும் அந்த ரசிகருக்கு பொத்திக் கொண்டு போ என ஒருமையில் பதிலடி கொடுத்திருக்கும் விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது .

- Advertisement -

பாத்திமா பாபுவின் ஒரு பதிவிற்கு கமெண்ட் செய்த அந்த இணையவாசி இந்துவை திருமணம் செய்து நீங்கள் ஏன் உங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார் . இதனால் கோபம் அடைந்த பாத்திமா பாபு ஒரு இந்துவை பள்ளிவாசலில் வைத்து திருமணம் செய்ததால் நான் என் மகன்களுக்கு முஸ்லிம் பெயர் வைத்திருக்கிறேன் நீங்கள் பொத்திக் கொண்டு போகவும் என காட்டமாக பதில் அளித்துள்ளார் . இதற்கு அந்த நபர் புது மேடையில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என பதில் அளித்துள்ளார் . இந்த பதிலால் கோபம் அடைந்த பாத்திமா பாபு பொது மேடையில் என்ன பிராண்ட் காண்டம் யூஸ் செய்கிறீர்கள் என்று கேட்டீங்களோ பொது மேடையாம்ல புது மேடை என கோபமாக பதில் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

Most Popular