சினிமா

அஜித்குமார் 62வது படத்தின் டைட்டில் ‘ துணிவே துணை ‘ இல்லை ! உண்மையாக வெளிவந்த தகவல் இதுதான் !

Ajithkumar 61 first look update

செப்டம்பர் மாதம் சினிமா விரும்பிகளுக்கு ஃபுல் மீல்ஸ். பல முக்கிய திரைப்படங்கள் மற்றும் வரவிருக்கும் பெரிய படங்களின் அப்டேட்கள் இந்த மாதம் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அறிவிப்பு ஹெச்.வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்க்குத் தான். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த காம்போவை வைத்து போனி கபூர் தயாரிக்கிறார்.

கொரோனா காலக் கட்டத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட்டைக் கேட்டு ரசிகர்கள் ரகளை செய்துவிட்டனர். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி 7 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. நடிகர் அஜித்குமார் உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்களைக் கொண்டாடுவதில் ரசிகர்கள் தீவிரமாய் இருந்தனர். இருப்பினும் 61வது படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று ஒரு பக்கம் காத்திருந்தனர்.

Advertisement

நேற்று முதல் நடிகர் அஜித் படத்தின் அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது என பிரபல சினிமா விமர்சகர்கள் மற்றும் டிராக்கர்கள் தங்களது டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டனர். அதனைக் கேட்ட பின் அஜித் ரசிகர்கள் அனைவரும் இன்பம் கடலில் மிதக்கின்றனர். அதே சமயம் படத்தின் டைட்டில் கசிந்து விட்டதாக ஒரு பக்கம் பேசிக் கொண்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் படத்தின் டைட்டில் ‘ துணிவே துணை ‘ என வதந்திகள் பரவி வருகின்றது. என்னை அறிந்தால் படத்திற்கு முதலில் இந்த தலைப்பை தான் பரிந்துரை செய்ததாகவும் கூறுகின்றனர். இது வெறும் வதந்தியே. அதனால் தலைப்பு பிடிக்காத ரசிகர்கள் யாரும் பதட்டப்படத் தேவையில்லை.

Advertisement

உண்மையிலே அஜித்குமார் 61வது படத்தின் தலைப்பு ஒரு வார்த்தை மட்டுமே எனவும் அது நாற்காலியை மையமாக கொண்ட தலைப்பாக இருக்கும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் அதாவது செப்டம்பர் 21 அல்லது 22 அன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி தான் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top