சினிமா

பயந்த சிம்பு ரசிகர்கள்.. கெளதம் மேனன் கொடுத்த ஹாப்பி நியூஸ்.. என்ன ஆச்சு?

சிம்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதற்குக் காரணம் விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களின் வெற்றி கூட்டணியான கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்புவுடன் மூன்றாவது முறையாக வெந்து தனித்தது காடு திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். மற்ற இரண்டு படங்கள் போலவே இதற்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Advertisement

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.இந்த நிலையில் கௌதம் மேனன் படத்தில் சமீப காலமாக வாய்ஸ் ஓவர் எனப்படும் படத்தின் பின்னணி குரல் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே என்னை நோக்கி பாயும் தொட்டா திரைப்படத்தில் படம் முழுவதும் தனுஷ் வாய்ஸ் ஓவர் கொடுத்து நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே அரட்சியை ஏற்படுத்தியது.

இதனை கௌதம் மேனன் மாற்றிக்கொள்ள வேண்டும் என அப்போதே ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தான் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் அண்மையில் ரிலீஸ் ஆனது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சனமும் வந்தது. அதற்கு காரணம் கௌதம் வாசுதேவ் மேனனின் வாய்ஸ் ஓவர் தான். ட்ரைலர் முழுவதும் கௌதம் மேனனின் குரல் மட்டும் தான் இருந்ததாகவும் , இம்மாதிரியான தயாரிப்பு ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கி விட்டதாகவும் பலரும் விமர்சித்தனர்.

Advertisement

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் மேனன், ரசிகர்கள் வாய்ஸ் ஓவர் குறித்து எழுப்பிய விமர்சனத்தை தாம் அறிவேன் என்று குறிப்பிட்டுள்ளார். தமது முந்தைய படங்களில் வாய்ஸ் ஓவர்கள் ஒரு கதாபாத்திரம் போல் படம் முழுவதும் பயணிக்கும்.ஆனால் வெந்து தணிந்தது காடு படத்தில் அப்படி இருக்காது. இது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் சிம்பு உள்ளிட்ட அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்பாடா ந வாய்ஸ் ஓவர்களை கேட்க தேவை இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கோப்ரா திரைப்படம் நீளமாக இருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில் அதனை பட குழுவினர் நீக்கினர். தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நீளமாக வந்திருப்பது பார்வையாளர்கள் அச்சம் மூட்டியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top