Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாவீடியோ- லோகேஷ் ரொம்ப ஸ்டிரிக்ட்..! லியோ அப்டேட் வெளியிட்ட கெளதம் மேனன்

வீடியோ- லோகேஷ் ரொம்ப ஸ்டிரிக்ட்..! லியோ அப்டேட் வெளியிட்ட கெளதம் மேனன்

- Advertisement -

2023 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் தென்னிந்திய திரைப்படங்கள் வரிசையில் முதலிடத்தில் லியோ இருக்கிறது. இதற்கு காரணம் மிகப்பெரிய வெற்றியை விக்ரம் திரைப்படத்தில் கொடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ், விஜய் வைத்து இரண்டாவது முறையாக இயக்குகிறார்.

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ் திரைப்பட உலகத்தை கொரோனாவுக்கு பிறகு காப்பாற்றியது. இதனால் லியோ படத்திருக்கான எதிர்பார்ப்பு எகிறியதை அடுத்து தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு சேட்டிலைட் ஓடிடி உரிமம் விற்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 500 கோடி ரூபாய் வருமானத்தை தயாரிப்பாளர்களுக்கு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பட குழு காஷ்மீரில் இருந்து தங்களது ஷெடுலை முடித்துவிட்டு சென்னை திரும்பினர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லியோ படத்தில் நடிக்கும் இயக்குனர் கௌதம் மேனனிடம், ரசிகர்கள் லியோ குறித்து அப்டேட் கேட்டனர்.

- Advertisement -

இதனால் முதலில் சிரித்த கௌதம் மேனன், பிறகு லியோ படம் குறித்து பேச தொடங்கினார்.அதில் எங்களுடைய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கண்டிப்பானவர். நான் இந்த நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என தெரிந்தவுடன் அவரே என்னை அழைத்து சார் ரசிகர்கள் லியோ அப்டேட் குறித்து ஏதேனும் கேட்பார்கள். நீங்கள் எந்த பதிலும் கூறாதீர்கள்.

அப்படி தொடர்ந்து வற்புறுத்தினால் ஷூட்டிங் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே சொல்லுங்கள் என தெரிவித்தார். இதை தொடர்ந்து பேசிய அவர் உங்கள் அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் செடியூல் தற்போது முடிந்து விட்டது. இனி சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நான் விஜய் சாரிடம் பணியாற்றினேன். தளபதி இஸ் அமேசிங் என்று கூறினார். இதனை அங்கிருந்த ரசிகர்கள் கூக்குரல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Most Popular